01.புற்றுநோய் என்றால் என்ன?
உடற்கலங்களில் ஏற்படும் கட்டுப்பாடற்ற அசாதாரணமான கலங்களின் வளர்ச்சியே புற்றுநோயாகும். எமது உடல் ஒரு கட்டிடம் போன்றது எனலாம். இயற்கையின் ஒரு திட்டவடிவமைப்பின் படி எமது உடல் பலகோடிக்கணக்கான கலங்களால் ஆக்கப்பட்டது. இவ்வுடற்கலங்கள் ஒவ்வொன்றுமே தனித்தனி உயிர் அலகாகவும்¸ அவை தமக்கெனச் சில இயல்புகளைக் கொண்டதாகவும் உடற்கலங்கள் ஒரு இயற்கை முறையில் பிரிந்து தம்மைப்போல இன்னொரு கலத்தை உருவாக்குவதைச் சாதாரண வளர்ச்சி என்போம்.
இதற்கு மாறாக¸ இயற்கைக்கு மாறுபட்ட முறையில் சாதாரண கலத்திற்கு வேறுபட்ட வடிவங்களில் பிரிவடைந்து¸ வித்தியாசமான வடிவங்களில் கலங்களின் உருவாக்கமே புற்று நோயின் தோற்றமாக அமைகிறது. இவ்வுயிர்க்கலங்கள் இயற்கைக்கு மாறான குணாதிசயங்களையும் கொண்டிருக்கக் காணப்படும். வேகமாக வளர்வதினால்¸ அவ்விடத்தில் ஒரு வெளி வளர்ச்சி அல்லது கட்டி தோற்றம் பெறலாம்.
02. புற்றுநோய் உடலின் எப்பாகத்தைத் தாக்குகிறது?
உடல் உறுப்புக்கள்¸ தோல்¸ இரத்தம் முதலான சகல பாகங்களையும் பாதிப்பதாக அமையலாம். முக்கியமாக பாதிக்கப்படும் பகுதிகளாக¸
#ஆண்கள் #பெண்கள்
அ. சுவாசத்தொகுதி அ. மார்பகம்
ஆ.சமிபாட்டுத்தொகுதி ஆ. சமிபாட்டுத்தொகுதி
இ. சிறுநீர்த்தொகுதி இ. சுவாசத்தொகுதி
ஈ. இரைப்பை ஈ . சிறுநீர்த்தொகுதி
உ. வாய்க்குழி உ. இரைப்பை
வயிறு¸ சிறு இரைப்பை¸ குரல்வளை¸ உணவுக்குழாய்¸ கர்ப்பப்பை¸ இரத்தம் முதலானவைகளும் பாதிப்புக்குள்ளாகும் ஏனைய பகுதிகளாகும்.
03. புற்றுநோய் ஏற்படக்கூடிய
#காரணிகள் எவை?
அ. முக்கிய காரணிகளிக அமைவது.
- பாதகமான உணவுப் பழக்கவழக்கம்.
- புகைத்தல்
- மதுபாவனை
- வெற்றிலையுடன் சுண்ணாம்பு¸ புகையிலை சேர்ந்த பாவனை முதலியன.
ஆ. பொதுவான காரணிகள்
- பரம்பரை காரணிகள்
- இரசாயன பொருட்கள் பாவனை
- நீண்டகால வியாதிகள்- ஆறாத (குடல்¸ தோல்) புண்கள்¸ சிறுநீர்க்கற்கள்¸ உணவு குறைபாட்டு
வியாதிகள் முதலியன.
- வைரசுகள்
- மனஅழுத்தம்
- ஹோர்மோன் சுரப்புக்கள்
- கதிர்வீச்சுக்கள் முதலியன
04. இந்நோய்க்கு இலக்காகக்கூடிய பகுதியினர் யாவர்?
-மார்புப்புற்றுநோயைத் தவிர ஏனைய எல்லாவகைப் புற்றுநோய்களும் ஆண்களையே கூடிய விகிதத்தில் பாதிப்பதாக அமைகிறது. சிகரெட் பாவனை¸கூடிய அளவு மதுபாவனை¸ பலதரப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்கள்¸ நச்சுப் பதார்த்தங்களுக்கு முகம் கொடுத்தல் முதலியன.
.
-ஒருவர் எங்கே வசிக்கிறார் என்பதும் புற்றுநோயின் தோற்றத்திற்கு உறுதுணையாக அமைய முடியும்.
சில தொழில்கள்¸ சிலகுழுமங்கள்¸ பாதகமான பழக்கவழக்கங்கள் முதலானவையும் இந்நோயின்
தோற்றத்தை தீர்மானிக்கலாம். குறிப்பாக புகைத்தல்¸ மதுபானம் அருந்துதல் முதலானவற்றை குறிப்பிடலாம்.
-பொதுவாக புற்றுநோய் சிறுபிள்ளைகளைவிட நடுத்தர¸ மற்றும் முதிர்ந்த வயதினரிடையே ஒரு
முக்கிய பிரச்சனையாகக் காணப்படுகிறது. இரத்தப் புற்றுநோய்களில் Acute Lyphoblastic Leukamia¸
வேறு சில மிகஅரிதாகப் பரம்பரை வழியாக வரும் புற்றுநோய்கள் முதலியன சிறுவயதினரைப் பாதிக்கின்றன.
05. புற்றுநோய் தொடர்பாக மேலும் சில தகவல்கள்
- சில
#தொற்றுநோய்கள்
- Hepatitis B Virus
- Hepatitis C Virus
- Helicobactor pylori-வயிற்றுப்புற்றுநோய்
- சில பதார்த்தங்களோடு தொடர்புபடல்
-பென்சின் அனலின்
-அஸ்பெஸ்ட் நார் தூசு
-சிலமருந்துகள்¸ கதிர்வீச்சு
-புறஊதாக்கதிர் முதலியன
-நீர்த்தன்மை குறைவான உணவுகள்¸ செயற்கையாக மாற்றி அமைக்கப்பட்ட உணவுகள்.
-அதிக கொழுப்பு¸ புரத உணவுகளின் அதீத பாவனை
-பூஞ்சணம் பிடித்த உணவுகளின் பாவனை- ஒடியல்¸ மோர் மிளகாய்¸ தானியங்கள்¸ பருப்பு வகை¸
பக்கற்றில் அடைத்த உணவுவகை (காலங்கடந்தவை)¸ பாக்குச் சீவல்¸ அவல்¸
ஏனைய உணவுப்பண்டங்கள் முதலியன.
-மிதமிஞ்சிய உப்புசேர் உணவுகள்
-அதிக சூடான உணவின் பாவனை
-விற்றமின் A¸இரும்புச்சத்துக் குறைவான உணவுகள் முதலானவைகள் ஆகலாம்.
07.
#புகைத்தல்
-சிகரெட்¸ சுருட்டு¸ பீடி முதலானவைகளைப் புகைத்தல்.
-வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு¸ புகையிலை
தொடர்ந்து சப்புதல். சில தொழிலாளர்கள் தமது
கொடுப்புக்குள் பல மணித்தியாலங்களாக இவற்றை
வைத்திருப்பது பாதிப்பாகலாம்.
-பீடிபிடிப்பவர் உதட்டின் மத்தியில் தொடர்ச்சியாகச் சூடு
பிடிப்பதனால் உதட்டில் புற்றுநோய்ஏற்பட .
வாய்ப்பாகலாம்
-மதுபானம் நீண்ட நாட்கள் பாவிப்பவர் மத்தியில் பெருங்குடல் புற்றுநோய்¸ கடைக்குடல் புற்றுநோய்¸
வாய்¸தொண்டைப் புற்றுநோய் ஏற்படுதல் சாத்தியமாகும்.
09. உடல் உறுப்புக்களைப் பாதிக்கும்
#முக்கியகாரணிகளாவன:-
அ.
#வாய்குழி¸
#களம்
-வெற்றிலை¸ பாக்கு¸ சுண்ணாம்பு¸ புகையிலை பாவனை முதலியன.
-மதுபானம் அருந்துதல்.
-விற்றமின் A குறைபாடு.
-சூடான உணவுண்ணல்.
-செயற்கை உணவு அல்லது விரைவுணவுப் பாவனை.
ஆ.
#சுவாசப்பை
-புகைப்பிடித்தல்
-தொழிற்சாலை கழிவுகள் - சுவாசம் (தொடர்ச்சியாக)
-கிருமிநாசினி சுவாசித்தல்¸ தெளித்தல்.
இ.
#இரைப்பை
- குறிப்பிட்ட வேளையில் உணவை உண்ணாமை. (வெறுமையாக இரைப்பை இருத்தல்).
- விற்றமின் A¸இரும்புச்சத்து குறைபாடு.
- செயற்கை உணவுப்பாவனை.
ஈ.
#மார்புப் புற்றுநோய்
- குழந்தைகளுக்கு பாலூட்டாமை.
- கருத்தடை மாத்திரை- புரோஸெஜ்ரரோன்¸ ஈஸ்ரஜன்¸ நீண்டகாலப் பாவனை.
- ஆடைகள் இறுக்கமாக அணிதல்.
உ.
#ஈரல்
- தொடர்ச்சியான மதுபாவனை.
- பூஞ்சணம் பிடித்த உணவுகள் பாவனை.
- தனிநபர் சுகாதாரம் சரிவரப் பேணாமை முதலியன.
ஊ.
#குடற்பகுதி
- சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரித்த உணவுகள் அதீத பாவனை¸ நார்த்தன்மை இல்லா
உணவுப்பாவனை.
- எமது உணவில் கூடியளவு விலங்குக் கொழுப்புச் சேர்த்தல்.
- இதனால் சீராக மலம் கழியா நிலைமை.
- மலச்சிக்கல் முதலியன.
10. குணம் குறிகள்
பொதுவானவை.
- உடல் மெலிதல்
- பசியின்மை
- சுறுசுறுப்பின்மை
- களைப்பு
- காரணமற்ற நீண்டநாட்கள் காய்ச்சல்
- மாறாத மஞ்சட்காமாலை
- உணவு விழுங்குவதில் கடினம்
- இரத்தம் வெளியேறுதல்
- தொடர்ச்சியான இருமல்
- உடலின் எப்பாகத்திலும்¸ மார்பு அடங்கலாக கட்டிகளின் தோற்றம்
- மாறாத புண்கள்
- உடல் அசதி முதலியன.
11. ஆரம்ப நிலையில் நோயை இனங்காண்பதன் அவசியம்
அ. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குறைந்தது வருடம் ஒருமுறையேனும் மருத்துவ பரிசோதனை அவசியம்.
ஆ. விபரிக்கப்பட்ட குணங்குறி காணின் உடனடியாக மருத்துவ பரிசோதனை அவசியம். முதலாம் படி
நிலை¸ இரண்டாம் படி நிலையில் இனம் காணின்¸ சிகிச்சை முறையில் குணமாக்கல் சாத்தியம்.
இ. இருபது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் யாவரும் சுயமார்பகப் பரிசோதனை அவசியமாகும்.
12. புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளாவன:-
அ. - கதிர்வீச்சு முறைச் சிகிச்சை
- மருந்து மூலம் சிகிச்சை
- சத்திர சிகிச்சை
- ஹோர்மோன் மூலம் சிகிச்சை
- நிர்ப்பீடன முறைச்சிகிச்சை
ஆ. ஆரம்ப நிலையில் இனம் கண்டு சிகிச்சை பெறுவதன் மூலம் பூரணமாகக் குணம் அடையும்
வாய்ப்பு அதிகமாகும்.
இ. சிகிச்சைகள் தனி ஒன்றாகவோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டதாகவோ அமையலாம்.
ஈ. புற்றுநோய் ஏற்பட்டுள்ள உறுப்பு¸ காலம்¸ பருமன் என்பவற்றைப் பொறுத்து சிகிச்சைகள்
மாறுபடலாம்.
முக்கிய குறிப்பு :-
பெண்கள் தமது குழந்தைகளுக்கு ஈராண்டுவரை தாய்ப்பால் ஊட்டல் மிகவும் அவசியமாகும். குழந்தைக்கும்¸ தாய்க்குமிடையிலான உறவுமுறைகள் செழுமையடையும். மேலும் மார்பகப்
புற்றுநோய்¸ கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்படாது தடுத்துக் கொள்வதற்கும் பேருதவியாக அமைய முடியும்.