Friday, June 24, 2016

புற்றுநோயை‬ ‪எதிர்கொண்ட‬ ‪‎நேரடி‬ ‪அனுபவம்‬


"எனது உடல்நிலை சரியில்லை - மாற்றம் அடைவதாக உணர்கிறேன்" என எனது
மனைவியிடம் முறையிடுவேன். எனது கை,கால்கள் குளிர்வதை உணர்வேன்.
தொடரான தாகம். காலையில் தலையிடி. படிப்படியாக எனது எடை குறைகிறது.
"இவ் அறிகுறிகள் எதுவும் எனக்கு ஆபத்தாக இருக்கலாம்" என யான் உணரவில்லை,
எனக் குறிப்பிட்டார் டேவிட். இப்போது எனக்கு 54 வயதாகிறது. தினமும் காலையில்
மூன்று மைல்கள் வரையில் வேகமாக நடப்பவன். எனது உடம்புக்கு என்ன ஆச்சு என
ஆச்சரியப்பட்டேன். 'எனக்கு நீரழிவாக இருக்கலாம்' என சிந்தித்தேன். கட்டிலில் சரிந்தபடியே மனப் போராட்டம் நடந்தது. திரும்பத் திரும்ப எனது மனைவியிடம் வருந்துவேன். (Boring)
'வைத்தியரைப் போய்ப் பாரும் எனக் கூறியபடியே நித்திரையாகிவிட்டார்.
இந்நிலையில் யான் வேலை செய்யும் கொம்பனிக்குப் பொறுப்பான வைத்தியரைச்
சந்திக்க முடிவுசெய்தேன். நிறுத்துப் பார்த்தபோது 4 கிலோ எடை குறைந்து காணப்பட்டது.
எனது காற்சட்டை மிகவும் தொய்ந்தும், கழருவதுபோல் இருந்ததும், எனது எடை
குறைந்தமைக்கான காரணம் என்பதையும். அறிந்து கொண்டேன். எனது மேலாடையைக் கழற்றியபின் ECG எடுத்தார்கள். மீண்டும் அணியும் போது என்னை அண்மையில் ஏற்பட்டதா?" அவதானித்த வைத்தியர் "உமது முதுகில் ஒரு கறுப்பு அடையாளம் இருக்கிறது? என வினா எழுப்பினார்.
நான்கு மாதங்களுக்கு முன் இவ் அடையாளத்தை அவதானித்தேன். எமது அறைக்
கண்ணாடியில் யான் முகச்சவரம் செய்யும் வேளையில் எனது வலது காதுக்குக் கீழ் எனது முதுகைத் திடுக்கென்று பார்த்தேன். (Swiveling) அவ்வேளையில் எனது நடுப்பகுதியில் கன்னங்கரேலென்ற (jet black) இப்புள்ளியைக் கண்டேன்.(half the size of a dime).
அது ஒரு பிறப்பு அடையாலமாகலாம் எனச் சிந்தித்து எனது மனையாள்
மேரியிடம் வினவினேன். அவருக்கும் அதை அவதானித்ததாகக் கூறிக்கொள்ள
முடியவில்லை. 'கறுப்புப்புள்ளியை அகற்றி விடுவோம்' என வைத்தியர் குறிப்பிட்டார்.
சருமரோக வைத்திய நிபுணரிடம் தொடர்பு கொண்டு திகதியை நிர்ணயித்தார்.
அடுத்த திங்கள் சத்திரசிகிச்சை (சிறியஅளவு) மூலம் கறுப்பு அடையாளத்தை அகற்றிவிட்டார்.அதில் குறிப்பிட்ட மாதிரித்துண்டை ஆய்வு கூடப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
உடன் பதில் தரவேண்டும். Important எனக்குறிப்பிட்டு இருந்தார்.
முதன்முதலில் வைத்தியர் அறிவுறுத்திய தன்மையின் காரணத்தினால் அக்கருப்பு அடையாளம்
(Malignant) உயிராபத்தானதாக அமையுமோ என என் ஆழ்மனதில் பதியலாயிற்று.
வைத்தியர் உடனடியாகத் தன்னை இன்று பி.ப.7.30க்குச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.
நீரழிவாகத்தான் இருக்கும் என நான் முதலில் சிந்தித்தேன். 'உமக்குச் சிறிய அளவில்
Melanoma-புற்றுநோய்' அச்சிறிய அளவிலான கலத்தை Lesion இலகுவாக அகற்றிவிடலாம்.
நீர் அதையிட்டு பயப்படத்தேவையில்லை' என வைத்தியர் குறிப்பிட்டார். இருந்தபோதிலும் எனது கை நடுங்குவது போல உணர்வு மேலோங்கிற்று.
அடுத்த வெள்ளி சத்திரசிகிச்சை நிபுணரைச் சந்திக்கும் ஏற்பாடு செய்தோம். மேலாடையைக் கழற்றிய பின்பு எனது உடலை முழுமையாக பரிசோதித்தார். மிகவும் கடினமான நிலையில் புற்றுநோய் காணப்படுகின்றது. இந்நிலைமையில் அண்மையில் உள்ள ஏனைய பகுதிக்கும் பரவும் சாத்தியம் உண்டு. இவ்வார்த்தைகளை உச்சரிக்கும்போது தமது எதுவிதமான
உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை. ஒரு கடுதாசியில் எவ்விதமாக சத்திரசிகிச்சை அமையலாம் எனக் கோடிட்டுக் காட்டினார்; முதுகில் ஒரு baseball அளவு அகற்றும் நிலைமை ஏற்படலாம். இந்நோய் மேலும் பரவாது இருப்பின் 80% வரையில் குணமாகும் சந்தர்ப்பம் உண்டு. (அதாவது சுவாசப்பை, ஈரல் (Liver) முதலியன). இவை மேலிடங்களுக்குப் பரவியிருக்குமாயின் பெரிய ஆபத்தாகலாம். (then you're in the big leagues') இச்செய்தியைக் கேட்டதும் நான் பயப்படவில்லை.
மனம் பேதலிக்கவும் இல்லை. (Revulsion) அதிர்ச்சியடையவும் இல்லை. நீதிபதி
மரணதண்டனையை அறிவித்தபோது ஏற்படும் நிலைமை போல் உணரலானேன்.
இன்னொரு வைத்தியரின் மேலான ஆலோசனையையும் பெறுவோம் (Second opinion)
எனக் கூறி வைத்தியர் தொடர்பு மேற்கொண்டார். முப்பது நிமிட இடைவெளியில்
வைத்திய நிபுணர் வந்து சேர்ந்தார். அவர் அவதானித்ததும் காலம் தாழ்த்தாமல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார். அதன்படி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை அடுத்து, நோயாளி குணம் அடையும் பிரிவுக்கு மாற்றப்பட்டேன்.
"நன்கு ஆழமாக சுவாசியும் டேவிட் " எனத் தாதி வேண்டினார். எனது வலது கை எனது வயிற்றுடன்
இணைத்து ரேப் பண்ணியிருந்ததை உணரலானேன். மேரி எனது வரவை ஆவலோடு
எதிர்பார்த்திருந்தார். பிரகாசமான முகத்தைக் கண்டேன். 'எப்படியாக உணருகிறீர்கள்' How do you feel? என வினாவினார். நன்று, இறை ஆசியினால் காப்பற்றப்பட்டுள்ளேன்.
அடுத்தநாள் காலையில் எனது கால்கள் உறுதியாக இருந்தன. எனது தலை/ மனம் தெளிவாக இருந்தது. நான் ஓடாவிடினும், என்னால் நடக்கமுடியும் எனத் தெரிந்து கொண்டேன். எனது நண்பர்கள் என்னைப் பார்க்கவும், ஆறுதல் வார்த்தைகள் தரவும் வருகை தந்தார்கள்.
ஒருசிலரின் நீண்ட பார்வை, 'எனது நண்பனே, நீ இறக்கும் தருவாயில் இருக்கிறாயா?' எனக் கேள்வி
எழுப்புவது போல் இருந்தது' என உணரலானேன். ஆய்வுகூட அறிக்கையை எதிர்பார்த்திருந்தேன்.
அடுத்தநாள் காலையில் சத்திரசிகிச்சை நிபுணர் வந்ததும், உமது உடலில் ஏனைய
எப்பகுதிக்கும் புற்றுநோய் பரவவில்லை. நீர் அமைதியாக செல்லலாம்.' எனத் தெம்பூட்டினார்.
ஆண்டவருக்குத் தோத்திரம் செய்து, நன்றி தெரிவித்தேன். என்றார் டேவிட்.
குறிப்பு:
1. ஆரம்ப அறிகுறி
- கைகள், கால்கள் குளிரும் நிலைமை.
- தொடரான தண்ணீர்த் தாகம்.
- தலையிடி
- படிப்படியாக எடை குறைதல்.
- விபரிக்கமுடியாத உடல் அசதி முதலியன.
2. இவ்வறிகுறிகள் எதுவாக இருக்கலாம் என்பதை டேவிட் குடும்பத்தினர் அறிந்திருக்கவில்லை.
3. ஆரம்பநிலையில் வைத்திய ஆலோசனை பெற்ற நிலைமையினால் உயிராபத்தில்
இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
4. 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கிராமமாகப் பரிசோதனைக்கு ஆளாதல் மிகவும்
அவசியமாகும்.

No comments:

Post a Comment

How to make your app responsive according to screen size in Flutter

Step 1 : You can use below code to take your screen width & height      double  width =  MediaQuery . of (context).size.width;      doub...