Friday, June 24, 2016

‪தொண்டை‬,‪குரல்வளைப்‬ ‪புற்றுநோய்‬

இலங்கையில் வயதான ஆண்களில் தொண்டை,குரல்வளைப் புற்றுநோய் கூடுதலாகச் சம்பவிப்பதாகப் புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன.
.
01. தொண்டைப்பகுதியில் அடங்குவன.
அ. மூக்குக்குப்பின்னால் உள்ள பகுதி.
ஆ. வாய்க்குழிக்குப் பின்னால் உள்ள பகுதி.
இ. தொண்டையின் கீழ்ப்பகுதி முதலியன.
 குரல்வளைப்பகுதி
இது சுவாசத்துடன் தொடர்புடைய பகுதியாகும். இதன் கடமைகள்.
√ உணவு விழுங்கும் போது, நுரையீரலுக்குள் உணவு செல்லாது
தடைசெய்வதாக அமைகிறது.
√ காற்றை நுரையீரலுக்குள் செலுத்துதல்.
√ பேசுவதற்கு உதவுவதாகவும் அமைகிறது.
√ புற்றுநோய் ஒருவருக்குச் சம்பவிக்கையில் உண்பதும், விழுங்குவதும்,
துன்பியலாகவே அமைய முடியும். மேலும் குரல் கரகரப்பாகவும் அமைவதாகலாம்
.
02. இந்நோயின் தோற்றப்பாட்டுக்கு காரணமாக அமைவன:
√ மதுபானம் கூடுதலாக அருந்துதல்: சாராயம், கசிப்பு, கள்
முதலானவைகளை அருந்துதல்.
√ புகைப்பிடித்தல்: சிகரெட், பீடி, சுருட்டு அதீத பாவனை.
√ தொழில் சார்ந்த பாதிப்புக்கள்: அஸ்பெஸ்ரஸ் தயாரிப்புத் தொடர்பானதொழில்; சல்பூரிக்கமிலம் - புகையைச் சுவாசிக்கும் நிலை.
√ புகையிலை மெல்லுதல்.
√ மூக்குப்பொடிப் பாவனை.
√ போசாக்கின்மை - விற்றமின்கள், தாதுப்பொருட்கள் போதியளவு உணவில் சேர்க்கப்படாமை.
√ வைரஸ் தொற்று முதலியன
.
03. தொண்டை,குரல்வளைப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.
√ உணவு உண்ணல், விழுங்குதல் கஷ்டம் ஏற்படும் நிலைமை -
தொண்டையில் - உண்ணாக்கு, அண்ணாக்கு, நாக்குப்பகுதி
முதலானவைகள் பாதிப்படையலாம்; இதனால் உண்பது, விழுங்குவது
கடினமாகலாம்; விழுங்குவது துன்பியலாக அமையமுடியும்.
√ குரல் நாணில் அசாதாரண வளர்ச்சி ஏற்படின், ஒலி ஏற்படுவதில்
மாற்றம் சம்பவிப்பதாகலாம். குரல் கரகரப்பாக அமையமுடியும்.
√ சுவாசம் துர்நாற்றம் மெலிட்டதாகலாம்.
√ மூச்சுவிடக் கஷ்டப்படுவர்.
√ இருமல் சளியுடன் இரத்தமும் காணப்படலாம்.
√ காதுப்பகுதியில் நோ ஏற்படும்.
√ நோய் மேலும் உறுப்புகளுக்குப் பரவியபின் - கழுத்துப் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் வீக்கம் அடையலாம்
.
04. தடுப்பு முறைகளாவன
√ தவறான வாழ்க்கைப் பழக்கங்களான புகைத்தல், தரக்குறைவான பாதகமான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை அதிகளவிலான மதுப்பாவனை முதலானவைகள் இந்நோயின் தோற்றப்பாட்டுக்குத் துணைபோவதாக அமைந்து விடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்பவர்களாவோம்.

No comments:

Post a Comment

How to make your app responsive according to screen size in Flutter

Step 1 : You can use below code to take your screen width & height      double  width =  MediaQuery . of (context).size.width;      doub...