அநேகமான மக்கள் நம்புவதுபோல் மது பாவிப்பதனை மாத்திரைகள் பாவித்தோ அல்லது ஊசிகள் போட்டோ மறந்துவிடச் செய்ய முடியாது.உண்மையில் மதுவிலிருந்து ஒருவர் விடுபட விரும்பினால், மதுவானது தனக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்ப தனை உணர்ந்து கொண்டு, தன்னுடைய மன வலிமையின் துணைகொண்டு அதிலிருந்து விடுபடுதலே சாத்தியமானதாகும்.அவ்வாறன்றி மதுவை நினைத்தவுடன் மறப்பதற்கான, மது இருக்கும் திசையையே நாடாமலிருப்பதற்கான, அதிசயமளிக்கும் மருந் துகள் எவையும் இதுவரை கண்டு பிடிக்கப்பட வில்லை.ஆயினும் மது அடிமை நிலையிலிருந்து வெளிவர விரும்பும் சிலருக்கு சிலவேளை களில் Disulfram (டைசல்பிடுரம்) என்ற குளி சையைப் பாவிக்குமாறு ஆலோசனை வழங் கப்படுவதுண்டு. டைசல்பிடுரம் பற்றிய சில விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.மதுவைப் பூரணமாக நிறுத்துவதற் கான சிகிச்சையின் ஒரு படிநிலையில் மது பாவனையாளர் தமது மனக்கட்டுப்பாட்டுடன் மீண்டும் மதுவை நாடாமலிருப்பதற்கு உதவி செய்யுமுகமாக “டைசல்பி(F)ரம்” குளிசைகள் கொடுக்கப்படுகின்றன.இந்தக் குளிசையை உட்கொண்டு விட்டு ஒருவர் மது அருந்துவாராயின், அவருக்குத் தீவிரமான, தாங்க முடியாத உடல் உபா தைகள் ஏற்படும். வயிற்றைப் பிரட்டுதல், வாந்தி, நெஞ்சடைத்தல், முகம் சிவத்தல், குரு தியமுக்கம் குறைதல், தலை சுற்றுதல், மயக் கம் வருதல் எனப் பல்வேறு விதமான, கடுமை யான ஆபத்தை விளைவிக்கக் கூடிய அறிகுறி கள் ஏற்படும். இந்த அறிகுறிகளை அனுபவித்த அல்லது அவற்றைப்பற்றி அறிந்துகொள்ளும் நபர்கள் இந்தக் குளிசையை எடுக்கும் வரை தாமாகவே மது அருந்துவதைத் தவிர்த்துக் கொள்வர்.குணமடைந்து கொண்டுவரும் ஒரு மதுஅடிமை நோயாளி, குறிப்பிட்ட காலத்திற்கு இந்தக் குளிசையை நாள்தோறும் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனை உறுதியாகப் பின்பற்றுவதற்கு அவரது குடும்ப உறவினர் ஒருவர் உதவி செய்யலாம். மதுவுக்கு அடிமையான ஒருவர் மது வில்லா வாழ்க்கையை வாழ்வதற்கு “டைசல்பி(F)ரம்” எனப்படும் இம்மருந்து பெருமளவு உதவி புரியும்.மது பாவிக்காத வேளைகளிலும் இந்த குளிசைகளினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றி வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.இந்தக் குளிசை பாவிக்கின்ற பொழுது மது அருந்தினால் எவ்வாறான உபாதைகள் ஏற்படும் என ஒருவர் அறிய விரும்பினால் அல்லது அனுபவிக்க விரும்பினால் அதற்கு “வெறுப் பேற்றும் சிகிச்சை” (Aversion therapy) என்கின்ற ஒரு சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.
Friday, June 24, 2016
மதுவை நிறுத்துவதில் மருந்துகளின் பங்களிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
How to make your app responsive according to screen size in Flutter
Step 1 : You can use below code to take your screen width & height double width = MediaQuery . of (context).size.width; doub...
-
Step 1 - Click the menu button then click Library Click Bookmarks and then click the Show All Bookmarks bar at the bott...
No comments:
Post a Comment