Friday, June 24, 2016

‎வாய்ச்‬ ‪சுகாதாரம்‬

ஆறு மாதத்திற்கு ஒருமுறையேனும், முகம் பார்க்கும் கண்ணாடியில் எமது வாயை நன்கு அவதானிப்போம். நல்ல வாய்ச்சுகாதாரம் பேணுதல்; நல்ல பழக்கவழக்கங்களைக் கையாளுதல், சரியான பற்சிகிச்சை பெறுவதன் மூலம் வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
• ஆரம்ப காலத்தில் இலகுவில் இனம் காணலாம்.
• இனம் காணின் இலகுவில் கட்டுப்படுத்தலாம்.
#01. அவதானிக்கக்கூடிய அசாதாரண நிலைகள்:
• உடைந்த கூரான பற்கள்/துண்டுகள், அவை நாக்கு,கன்னம், அண்ணம் முதலான பகுதிகளைத் தொடர்ந்து உரசின், குறிப்பிட்ட பகுதியில் உள்ள கலங்கள் பாதிப்பு. இதனால் அவை அசாதாரணமாக வளரலாம்.வெண்படலமாக மாறுதல். புண்ணாதல்
.
• வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலானவைகளைக் கொடுப்புக்குள் நீண்ட நேரம் வைத்திருத்தல். இதனால் அக்கலங்கள் அழிய நேரிடல்.அசாதாரணமான வளர்ச்சிக்கு வாய்ப்பு - வெண், செம்மை, கலந்த படலங்கள்.
• பீடி பிடிப்பவர்கள் உதட்டில் - தொடர்ந்து சூடு பிடிக்கில் உதட்டில் உள்ள கலங்கள் வரட்சியடைதல்; கலங்கள் சிதைதல்.
• கட்டுப்பற்கள் / அவைகள் அண்டும் பிரதேசங்கள் தொடர்ந்து நெருடல் - கலங்கள் அழிதல் - அசாதாரண வளர்ச்சிக்கு வழிவகுத்தல். வெண்படலமாகலாம்.
குறிப்பு:
1. குறிப்பிட்ட காரணிகளை இடைநிறுத்தின், மீண்டும் சுமூகநிலைமை திரும்பும். இவையே முதலாம் படியாகும்
2. தவறின் குறிப்பிட்ட பகுதி வெடிக்கலாம். பூக்கோவா போன்று மாறலாம். வைத்திய ஆலோசனை தேவையாகும்.
#02. வாயைச் சுயமாகப் பரீட்சித்துப் பார்க்கும் முறை.
நல்ல வெளிச்சமுள்ள இடத்தில், முகம் பார்க்கும் கண்ணாடி முன்நின்று எம்மால் செய்யமுடியும்.
1. முதலில் எமது கைகளைச் சவர்க்காரம் இட்டுக் கழுவுதல்
2. செயற்கைப் பல் பூட்டுக்கள் இருப்பின் அவற்றைப் பக்குவமாகக் கழற்றிக்கொள்வோம்.
3. வாயைக் கழுவி நன்றாகச் சுத்தம் செய்வோம். பின் அவதானிப்போம்.
‪#‎கீழ்‬ உதடு: இரண்டு கைகளின் பெருவிரல்களையும், ஆள்காட்டி விரல்களையும் பாவித்து கீழ் உதட்டைப் பிரட்டிக் கீழே இழுத்து பரீட்சிப்போம்.
‪#‎மேல்‬ உதடு: இரண்டு கைகளின் பெருவிரல்களையும், ஆள்காட்டி விரல்களையும் பாவித்து மேல் உதட்டை மேற் பக்கமாக இழுத்து பரீட்சிப்போம்.
‪#‎கன்னத்தின்‬ உட்புறம்: வாயை திறந்து வலக்கையின் பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து வலப்பக்கம் இழுத்து வலப்பக்கக் பாவித்து வலப்பக்கம் இழுத்து வலப்பக்கக் பார்க்கவும். அதே விதமாக வாயைத் திறந்து இடக்கையின் பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து, வாயின் இடப்பக்கக் கன்னத்தின் உட்புறத்தைப் பரீட்சிக்கவும்.
‪#‎நாக்கு‬: வாயைத் திறந்து முடிந்தளவு நாக்கை வெளியே நீட்டி நாக்கின் தொடக்கம் முதல் கடைசி வரை பரீட்சிக்கவும். நாக்கை முன்பக்கமாக நீட்டி, இடப்பக்க பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து, நாக்கின் இடப்பக்கத்தையும், வலப்பக்க பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து, வாயின் வலப்பக்க மூலையை வலப்பக்கமாக இழுத்து நாக்கின் வலப்பக்கத்தையும் பரீட்சித்துப் பார்க்கவும்.நாக்கை முன்பக்கமாக நீட்டி, வலக்கையின் பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து, நாக்கை வலப்பக்கமாக இழுத்து வாயின் இடப்பக்க மூலையை இடப்பக்கத்திற்கு இழுத்து நாக்கின் இடப்பக்கத்தையும் பரீட்சித்துப் பார்க்கவும்.நாக்கை மேலே பிடித்து நாக்கின் கீழ்ப்பக்கத்தைப் பரீட்சிக்கவும்.
‪#‎வாயின்‬ மேற்பக்கம்/வாயின் கீழ்ப்பக்கம் : நாக்கை இலேசாக மடித்து, வாயின் கீழ்ப்பக்கத்தையும், வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டி எல்லா இடத்தையும் பரீட்சிக்கவும். கடைசியாகத் தாடைமுதல்,கழுத்தின் கீழ்ப்பகுதி வரை, கைவிரல்களால் தடிப்புக்கள் உள்ளனவா எனத் தடவிப் பார்க்கவும். வாயில் ஏதாவது வித்தியாசம் இருப்பின், உடனடியாகப் பல் வைத்திய நிபுணரை நாடவும்.

No comments:

Post a Comment

How to make your app responsive according to screen size in Flutter

Step 1 : You can use below code to take your screen width & height      double  width =  MediaQuery . of (context).size.width;      doub...