Friday, June 24, 2016

‪‎வாய்க்குழிப்‬ ‪புற்றுநோய்‬

முன்நாக்கின் மூன்றில் இரண்டு பகுதி, நாவின் கீழ் உள்ள அடித்தளம், முரசு, உதடுகள், சொக்குப்பகுதி எனப் பல பகுதிகளை உள்ளடக்கியதே வாய்க்குழி எனப்படும்.
1. வாய்ப்புற்றுநோய் ஆரம்ப நிலையில் வலியோ, இரத்தம் கசிதலோ, வாயின் செயற்பாடுகளுக்குத் தடையோ கொடுக்கமாட்டாது.இதனால் ஆரம்ப நிலையை யாரும் உணர மாட்டார்கள்.
2. ஆரம்ப நிலையில் காணும் அறிகுறிகளாவன:
அ. அகற்ற முடியாத வெள்ளை நிறமான தழும்பு.
ஆ. சிவப்பு,வெள்ளை நிறம் கலந்த தழும்புகள்.
இ. செந்நிறமாக படர்ந்த பகுதி.
ஈ. நீண்ட நாட்களாக மாறாத புண்.
உ. நாக்கை மடிப்பதற்கு அல்லது வாயைத் திறப்பதற்குச் சிரமம்.சரிவரக் கவனம் செலுத்தாவிடின் இரண்டு- மூன்று ஆண்டுகளில் புற்று நோயாக மாறமுடியும்.
• LEUKOPLAKIA
• ERYTHRO PLASIA
குறிப்பு: இவை ஏற்படுவதற்கான காரணிகளை இனம்கண்டு இவற்றை நிறுத்தினால் இந்நிலைமையில் இருந்து விடுபடலாம்.
01. வாய்ப்புற்றுநோய்
எமது நாட்டில் வயது முதிர்ந்தோரை அதிகளவு பாதிக்கும் புற்றுநோய் வாயில்தான் ஏற்படுகிறது. இந்நோய் ஆரம்பநிலையில் இனம் காண முடியும். முதலாம் படி ஆரம்ப நிலையில் இனம்காணின் இந்நோயை முற்றாகத் தடுக்கலாம்.
முதல் அறிகுறியாகத் தென்படுவது:
• அகற்ற முடியாத வெண்படலம்.
• சிவப்பு- வெள்ளை நிறமான அகற்ற முடியாத தழும்பு.
• வாயின் மென்சவ்வில் ஏற்படும் எரிவுத்தன்மையான புண்.
• வாயைத் திறத்தல், நாக்கை நீட்டுதல் படிப்படியாகக் குறைதல்.
• நீண்ட நாட்களாக மாறாத புண்.
• வாய்க்குழி மேலணிக் கவசத்தோல் கழன்று போதல்.
• உதடு அல்லது வாய்க்குழியில் வளரும் தசைத்தொகுதி.
• உணவை மெல்லுதலிலோ, விழுங்குதலிலோ ஏற்படும் வலி.
• இரத்தக்கசிவு வாய்க்குழியில் ஏற்படல்.
• உறுதியான பற்கள் காலக்கிரமத்தில் தளருதல்- முரசில் அல்லது அதன் அருகில் புற்றுநோய் ஏற்படின் இந்நிலைமை சம்பவிக்கலாம்.
காலம் கடந்த நிலையில் ஏற்படும் மாற்றம்.
அ. நாக்குப் பூரணமாக அசைக்க முடியாது; வாய்க்குழியுடன் ஓட்டுப்படுதல்.
ஆ. தாடையை அசைப்பதில் சிரமம்.
இ. கழுத்துப் பகுதியில் நிணநீர்க் கணுக்கள் வீக்கம் அடைதல்.
ஏற்படுவதற்கான காரணிகள்.
அ. வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு முதலானவற்றை
மெல்லுதல், சுண்ணாம்பு, புகையிலை முதலானவற்றில் புற்றுநோயை
ஏற்படுத்தக் கூடிய பதார்த்தங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆ. சிகரெட், புகையிலை, பீடி முதலானவைகளைப் புகைத்தல்.
இ. மதுபானம்- சாராயம் , கசிப்பு, புளித்த கள் முதலானவைகளை அருந்துதல்.
ஈ. அதிகம் சூடான உணவுகளை அருந்துதல்.
உ. அதிகளவு மிளகாய், மிளகாய்த் தூளின் பாவனை.
ஊ. எமது வாய்ச்சுகாதாரத்தைச் சரிவரப் பேணாமை.
- பற்கள், வாய்க்குழி சரிவரச் சுத்தம் செய்யாமை.
- அனேகமானவர்கள் கூடிய அளவு இனிப்புணவுப் பாவனை- இரவில் பல் தீட்டுவதில்லை
- உடைந்த கூரான பற்கள் அண்டைப்பகுதியைத் தொடர்ந்து உறுத்துதல். ( நாக்கு, கன்னம், முதலியன) இதனால் அப்பகுதிக்கலங்கள் இருக்குமாகில் கலங்கள் இறப்பதோடு மாத்திரமல்ல, அசாதாரண உறுத்தப்படுதல்/ தொடர்ந்து இந்நிலை வளர்ச்சி - பின் புற்றுநோயாகப் பரிணமித்தல்
- புகையிலை - சுண்ணாம்பு சேர் வெற்றிலை - பாக்கை நீண்ட நேரம் வாய்க்குள் வைத்திருத்தல். குறிப்பிட்ட பகுதி பாதிப்பு- வேன்படலமாக மாற்றம்- காலக்கிரமத்தில் புற்றுநோயாக மாறுதல்.
- பீடி புகைக்கும் போது, தொடர்ந்து உதடு சூடு ஏற்படல் - கலங்கள்
இறத்தல் - புற்றுநோயாதல் முதலியன.
எ. காய்கறி வகை, கீரை வகைகள் - கூடிய அளவு பீடை நாசினிகளைப் பாவித்தல். அதன் நச்சுத்தன்மை குறைவடைய முன்னதாக இவைகளை அறுவடை செய்து சந்தைப்படுத்துதல்.
- உதாரணமாக கிருமிநாசினி விசிறி (கீரை, வெண்டி முதலியன) அடுத்த தினங்களில் அறுவடை/ பாவனை. இதனால் வாய்க்குழியின் மேலணி பாதிப்படைதல்.
- விசிறுபவர்கள் எந்தவித தற்பாதுகாப்பும் இன்றி நீண்ட நேரம் விசுறுதல், இயந்திரத்தில் அடைபாடு ஏற்படும் வேளையில், வாயினால் ஊதி/ உறிஞ்சி அடைப்பெடுத்தல் முதலியன.
ஏ. போசாக்குக் குறைபாடு - உயிர்ச்சத்து A,E மற்றும் தாதுப்பொருட்களின் பற்றாக்குறை, இரத்தச்சோகை முதலியன. இதனால் வாய்க்குழி மேலணி உருக்குலைதல்- எனவே புற்றுநோயின் தாக்கத்திற்கு இலகுவில் ஆளாதல் முதலியன.
ஐ. செயற்கைப் பல், பற்கூட்டம் முதலியன எதிர்பாராத நிலையில் தொடர்ந்து கீழ் அல்லது மேல் தாடையை உறுத்துமாயின் மென்சவ்வுகள்; கலங்கள் உறுத்தும் நிலை - புற்றுநோயைத் தோற்றிவிக்கலாம்.
வாய்ப்புற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்.
1. பாதகமான பழக்கவழக்கங்களைத் தவிர்த்தல்.
- வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு முதலானவைகளின் பாவனைக்கு ஆளாகாது இருத்தல்.
- பாவிக்கும் நிலைமையாகில்:
√ தினம் பாவிக்கும் தடவைகளை முதலில் குறைத்தல்.
√ மென்ற வெற்றிலையை நீண்ட நேரம் வாய்க்குள் வைத்திருத்தலைத் தவிர்த்தல்.
√ இவை பாவிக்க நேரிடின் உடனுக்குடன் வாயை நன்கு கொப்பளித்தல்.
√ மதுபாவனை, புகைத்தல் முதலானவைகளைப் படிப்படியாகக் குறைத்தல்; முற்றாகத் தவிர்த்தல்.
√ இவை தொடர்பாகச் சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல். சிறு வயதினிலேயே இப்பழக்கத்திற்கு ஆளாகாது தவிர்த்தல்.
2. வாய்ச்சுகாதாரத்தை நன்கு பேணல்.
- உடைந்த பற்கள், சூத்தைப் பற்களுக்கு காலதாமதமின்றி சிகிச்சையைப் பெறுதல்.
-செயற்கைப் பல், பற்கூட்டம் சரிவரப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கிராமமாக வாயின் உட்புறம் அவதானிக்கப்படல் வேண்டும்.
- காலை, மாலை கிராமமாக பல்துலக்குதல் வேண்டும்.
- சாப்பாட்டின் பின் உப்புநீர் பாவித்துப் பல் துலக்குதல்.
- எமது வாய், பற்களை நாமே கிராமமாகப் பரிசோதித்தல். குறைகளை இனம்காணின் பல் வைத்தியரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
- ஆறுமாதத்திற்கு ஒருமுறை பல்வைத்தியர் எம் பற்களை பரிசோதனை செய்வதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும்.
- எமது முரசு, சொக்கு, தொண்டை முதலானவைகளில் வெண்படலம், வெல்வெட் போன்ற தோற்றம் காணின் காலதாமதமின்றி பல்வைத்திய நிபுணர் ஆலோசனையை நாடவும்.
3. சாதகமான பழக்கவழக்கங்களை நாம் சிறுவயதில் இருந்து கடைப்பிடித்தல்- வாழ் நாட்கள் பூராகவும் அரணாக அமைய முடியும்.
4. தினம் எமது உணவில் காய்கறி, பச்சை இலைவகையின் பாவனை ஊக்கிவிக்கப்படல் வேண்டும்.

No comments:

Post a Comment

How to make your app responsive according to screen size in Flutter

Step 1 : You can use below code to take your screen width & height      double  width =  MediaQuery . of (context).size.width;      doub...