Friday, June 24, 2016

புற்றுநோய்- பொதுவான கண்ணோட்டம்.


01.புற்றுநோய் என்றால் என்ன?
உடற்கலங்களில் ஏற்படும் கட்டுப்பாடற்ற அசாதாரணமான கலங்களின் வளர்ச்சியே புற்றுநோயாகும். எமது உடல் ஒரு கட்டிடம் போன்றது எனலாம். இயற்கையின் ஒரு திட்டவடிவமைப்பின் படி எமது உடல் பலகோடிக்கணக்கான கலங்களால் ஆக்கப்பட்டது. இவ்வுடற்கலங்கள் ஒவ்வொன்றுமே தனித்தனி உயிர் அலகாகவும்¸ அவை தமக்கெனச் சில இயல்புகளைக் கொண்டதாகவும் உடற்கலங்கள் ஒரு இயற்கை முறையில் பிரிந்து தம்மைப்போல இன்னொரு கலத்தை உருவாக்குவதைச் சாதாரண வளர்ச்சி என்போம்.
இதற்கு மாறாக¸ இயற்கைக்கு மாறுபட்ட முறையில் சாதாரண கலத்திற்கு வேறுபட்ட வடிவங்களில் பிரிவடைந்து¸ வித்தியாசமான வடிவங்களில் கலங்களின் உருவாக்கமே புற்று நோயின் தோற்றமாக அமைகிறது. இவ்வுயிர்க்கலங்கள் இயற்கைக்கு மாறான குணாதிசயங்களையும் கொண்டிருக்கக் காணப்படும். வேகமாக வளர்வதினால்¸ அவ்விடத்தில் ஒரு வெளி வளர்ச்சி அல்லது கட்டி தோற்றம் பெறலாம்.
02. புற்றுநோய் உடலின் எப்பாகத்தைத் தாக்குகிறது?
உடல் உறுப்புக்கள்¸ தோல்¸ இரத்தம் முதலான சகல பாகங்களையும் பாதிப்பதாக அமையலாம். முக்கியமாக பாதிக்கப்படும் பகுதிகளாக¸
‪#‎ஆண்கள்‬ ‪#‎பெண்கள்‬
அ. சுவாசத்தொகுதி அ. மார்பகம்
ஆ.சமிபாட்டுத்தொகுதி ஆ. சமிபாட்டுத்தொகுதி
இ. சிறுநீர்த்தொகுதி இ. சுவாசத்தொகுதி
ஈ. இரைப்பை ஈ . சிறுநீர்த்தொகுதி
உ. வாய்க்குழி உ. இரைப்பை
வயிறு¸ சிறு இரைப்பை¸ குரல்வளை¸ உணவுக்குழாய்¸ கர்ப்பப்பை¸ இரத்தம் முதலானவைகளும் பாதிப்புக்குள்ளாகும் ஏனைய பகுதிகளாகும்.
03. புற்றுநோய் ஏற்படக்கூடிய ‪#‎காரணிகள்‬ எவை?
அ. முக்கிய காரணிகளிக அமைவது.
- பாதகமான உணவுப் பழக்கவழக்கம்.
- புகைத்தல்
- மதுபாவனை
- வெற்றிலையுடன் சுண்ணாம்பு¸ புகையிலை சேர்ந்த பாவனை முதலியன.
ஆ. பொதுவான காரணிகள்
- பரம்பரை காரணிகள்
- இரசாயன பொருட்கள் பாவனை
- நீண்டகால வியாதிகள்- ஆறாத (குடல்¸ தோல்) புண்கள்¸ சிறுநீர்க்கற்கள்¸ உணவு குறைபாட்டு
வியாதிகள் முதலியன.
- வைரசுகள்
- மனஅழுத்தம்
- ஹோர்மோன் சுரப்புக்கள்
- கதிர்வீச்சுக்கள் முதலியன
04. இந்நோய்க்கு இலக்காகக்கூடிய பகுதியினர் யாவர்?
-மார்புப்புற்றுநோயைத் தவிர ஏனைய எல்லாவகைப் புற்றுநோய்களும் ஆண்களையே கூடிய விகிதத்தில் பாதிப்பதாக அமைகிறது. சிகரெட் பாவனை¸கூடிய அளவு மதுபாவனை¸ பலதரப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்கள்¸ நச்சுப் பதார்த்தங்களுக்கு முகம் கொடுத்தல் முதலியன.
.
-ஒருவர் எங்கே வசிக்கிறார் என்பதும் புற்றுநோயின் தோற்றத்திற்கு உறுதுணையாக அமைய முடியும்.
சில தொழில்கள்¸ சிலகுழுமங்கள்¸ பாதகமான பழக்கவழக்கங்கள் முதலானவையும் இந்நோயின்
தோற்றத்தை தீர்மானிக்கலாம். குறிப்பாக புகைத்தல்¸ மதுபானம் அருந்துதல் முதலானவற்றை குறிப்பிடலாம்.
-பொதுவாக புற்றுநோய் சிறுபிள்ளைகளைவிட நடுத்தர¸ மற்றும் முதிர்ந்த வயதினரிடையே ஒரு
முக்கிய பிரச்சனையாகக் காணப்படுகிறது. இரத்தப் புற்றுநோய்களில் Acute Lyphoblastic Leukamia¸
வேறு சில மிகஅரிதாகப் பரம்பரை வழியாக வரும் புற்றுநோய்கள் முதலியன சிறுவயதினரைப் பாதிக்கின்றன.
05. புற்றுநோய் தொடர்பாக மேலும் சில தகவல்கள்
- சில ‪#‎தொற்றுநோய்கள்‬
- Hepatitis B Virus
- Hepatitis C Virus
- Helicobactor pylori-வயிற்றுப்புற்றுநோய்
- சில பதார்த்தங்களோடு தொடர்புபடல்
-பென்சின் அனலின்
-அஸ்பெஸ்ட் நார் தூசு
-சிலமருந்துகள்¸ கதிர்வீச்சு
-புறஊதாக்கதிர் முதலியன
-நீர்த்தன்மை குறைவான உணவுகள்¸ செயற்கையாக மாற்றி அமைக்கப்பட்ட உணவுகள்.
-அதிக கொழுப்பு¸ புரத உணவுகளின் அதீத பாவனை
-பூஞ்சணம் பிடித்த உணவுகளின் பாவனை- ஒடியல்¸ மோர் மிளகாய்¸ தானியங்கள்¸ பருப்பு வகை¸
பக்கற்றில் அடைத்த உணவுவகை (காலங்கடந்தவை)¸ பாக்குச் சீவல்¸ அவல்¸
ஏனைய உணவுப்பண்டங்கள் முதலியன.
-மிதமிஞ்சிய உப்புசேர் உணவுகள்
-அதிக சூடான உணவின் பாவனை
-விற்றமின் A¸இரும்புச்சத்துக் குறைவான உணவுகள் முதலானவைகள் ஆகலாம்.
07. ‪#‎புகைத்தல்‬
-சிகரெட்¸ சுருட்டு¸ பீடி முதலானவைகளைப் புகைத்தல்.
-வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு¸ புகையிலை
தொடர்ந்து சப்புதல். சில தொழிலாளர்கள் தமது
கொடுப்புக்குள் பல மணித்தியாலங்களாக இவற்றை
வைத்திருப்பது பாதிப்பாகலாம்.
-பீடிபிடிப்பவர் உதட்டின் மத்தியில் தொடர்ச்சியாகச் சூடு
பிடிப்பதனால் உதட்டில் புற்றுநோய்ஏற்பட .
வாய்ப்பாகலாம்
-மதுபானம் நீண்ட நாட்கள் பாவிப்பவர் மத்தியில் பெருங்குடல் புற்றுநோய்¸ கடைக்குடல் புற்றுநோய்¸
வாய்¸தொண்டைப் புற்றுநோய் ஏற்படுதல் சாத்தியமாகும்.
09. உடல் உறுப்புக்களைப் பாதிக்கும் ‪#‎முக்கிய‬காரணிகளாவன:-
அ. ‪#‎வாய்குழி‬¸ ‪#‎களம்‬
-வெற்றிலை¸ பாக்கு¸ சுண்ணாம்பு¸ புகையிலை பாவனை முதலியன.
-மதுபானம் அருந்துதல்.
-விற்றமின் A குறைபாடு.
-சூடான உணவுண்ணல்.
-செயற்கை உணவு அல்லது விரைவுணவுப் பாவனை.
ஆ. ‪#‎சுவாசப்பை‬
-புகைப்பிடித்தல்
-தொழிற்சாலை கழிவுகள் - சுவாசம் (தொடர்ச்சியாக)
-கிருமிநாசினி சுவாசித்தல்¸ தெளித்தல்.
இ. ‪#‎இரைப்பை‬
- குறிப்பிட்ட வேளையில் உணவை உண்ணாமை. (வெறுமையாக இரைப்பை இருத்தல்).
- விற்றமின் A¸இரும்புச்சத்து குறைபாடு.
- செயற்கை உணவுப்பாவனை.
ஈ. ‪#‎மார்புப்‬ புற்றுநோய்
- குழந்தைகளுக்கு பாலூட்டாமை.
- கருத்தடை மாத்திரை- புரோஸெஜ்ரரோன்¸ ஈஸ்ரஜன்¸ நீண்டகாலப் பாவனை.
- ஆடைகள் இறுக்கமாக அணிதல்.
உ. ‪#‎ஈரல்‬
- தொடர்ச்சியான மதுபாவனை.
- பூஞ்சணம் பிடித்த உணவுகள் பாவனை.
- தனிநபர் சுகாதாரம் சரிவரப் பேணாமை முதலியன.
ஊ. ‪#‎குடற்பகுதி‬
- சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரித்த உணவுகள் அதீத பாவனை¸ நார்த்தன்மை இல்லா
உணவுப்பாவனை.
- எமது உணவில் கூடியளவு விலங்குக் கொழுப்புச் சேர்த்தல்.
- இதனால் சீராக மலம் கழியா நிலைமை.
- மலச்சிக்கல் முதலியன.
10. குணம் குறிகள்
பொதுவானவை.
- உடல் மெலிதல்
- பசியின்மை
- சுறுசுறுப்பின்மை
- களைப்பு
- காரணமற்ற நீண்டநாட்கள் காய்ச்சல்
- மாறாத மஞ்சட்காமாலை
- உணவு விழுங்குவதில் கடினம்
- இரத்தம் வெளியேறுதல்
- தொடர்ச்சியான இருமல்
- உடலின் எப்பாகத்திலும்¸ மார்பு அடங்கலாக கட்டிகளின் தோற்றம்
- மாறாத புண்கள்
- உடல் அசதி முதலியன.
11. ஆரம்ப நிலையில் நோயை இனங்காண்பதன் அவசியம்
அ. 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் குறைந்தது வருடம் ஒருமுறையேனும் மருத்துவ பரிசோதனை அவசியம்.
ஆ. விபரிக்கப்பட்ட குணங்குறி காணின் உடனடியாக மருத்துவ பரிசோதனை அவசியம். முதலாம் படி
நிலை¸ இரண்டாம் படி நிலையில் இனம் காணின்¸ சிகிச்சை முறையில் குணமாக்கல் சாத்தியம்.
இ. இருபது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் யாவரும் சுயமார்பகப் பரிசோதனை அவசியமாகும்.
12. புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளாவன:-
அ. - கதிர்வீச்சு முறைச் சிகிச்சை
- மருந்து மூலம் சிகிச்சை
- சத்திர சிகிச்சை
- ஹோர்மோன் மூலம் சிகிச்சை
- நிர்ப்பீடன முறைச்சிகிச்சை
ஆ. ஆரம்ப நிலையில் இனம் கண்டு சிகிச்சை பெறுவதன் மூலம் பூரணமாகக் குணம் அடையும்
வாய்ப்பு அதிகமாகும்.
இ. சிகிச்சைகள் தனி ஒன்றாகவோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்டதாகவோ அமையலாம்.
ஈ. புற்றுநோய் ஏற்பட்டுள்ள உறுப்பு¸ காலம்¸ பருமன் என்பவற்றைப் பொறுத்து சிகிச்சைகள்
மாறுபடலாம்.
முக்கிய குறிப்பு :-
பெண்கள் தமது குழந்தைகளுக்கு ஈராண்டுவரை தாய்ப்பால் ஊட்டல் மிகவும் அவசியமாகும். குழந்தைக்கும்¸ தாய்க்குமிடையிலான உறவுமுறைகள் செழுமையடையும். மேலும் மார்பகப்
புற்றுநோய்¸ கருப்பைக் கழுத்துப் புற்றுநோய் ஏற்படாது தடுத்துக் கொள்வதற்கும் பேருதவியாக அமைய முடியும்.

புற்றுநோய் ஆரம்ப நிலையில் இனங்காணப்பட வேண்டும்...


நோயின் ஆரம்பக்கட்டத்தில் எதுவிதமான வெளிப்படைத்தன்மையை குறிக்கும் அறிகுறிகள் எதுவும் காட்டப்படுவதில்லை. இதனால், ஆரம்ப நிலையில் நோயாளர்கள் வைத்திய ஆலோசனை பெற நாடுதல் அரிதாகும். எனவே கிராமமாக ஆரோக்கிய நிலையில் இருப்பவர்கள் தயக்கமின்றி தமக்கு புற்றுநோய் இல்லை என்பதைப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துதல் சிறப்புடையதாகும். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கானவர்களைப் பரிசீலித்து அவர்கள் மத்தியில் ஆரம்பக்கட்டத்தில், தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பவர்களை இனம்காணல் சாத்தியமாகும். இவை இலகுவான காரியமல்ல.
எனவே இந்நோய்க்கு இலக்காகக்கூடிய ஆபத்தான சூழலில் இருப்பவர்களை கிராமமாகப் பரிசீலித்தல் நன்மை பயப்பதாக அமையும்.
01. அவ்விலக்கினர் ஆகுபவர்கள்:-
அ. கூடுதலாகப் புகைப்பிடிப்பவர்கள்.
ஆ. வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புடன் - புகையிலை சப்புபவர்கள்.
இ. தொழில் நிலைப்பாதிப்பு - அஸ்பஸ்ரஸ் தொழிலில் ஈடுபடுபவர்; 'X' ray கதிர்வீச்சுடன் செய்பவர்.
ஈ. சாயம் போடும் தொழில்புரிவோர் முதலானோர். ஆரம்பக்கட்டத்தில் இனம் காண்பதால் உயிராபத்து ஏற்படுவதை தடுக்கலாம் அதற்கான செலவீனமும் மிகக்குறைவாகும்.
.
உ. மார்பகப் புற்றுநோய், வாயில் சம்பவிக்கும் புற்றுநோய் - நாம் ஒவ்வொருவரும் எமது வாயை கண்ணாடியில் பார்த்து ஏதாவது அசாதாரண நிலை இருப்பதை அவதானிக்கலாம்.
ஊ. நீண்ட நேரம் வெற்றிலை பாக்கு பாவிப்பவர் சொக்கை உட்பக்கம் கண்ணாடியில் பார்க்கலாம். வெண்படலமான நிறமாற்றம் - இவை முதலாம் படிநிலைமையாகும். வெற்றிலைப் பாக்குப்போடுவதை நிறுத்தினால் இவ்வாபத்தில் இருந்து விடுபடலாம்.
எ. சில பற்கள் உடைந்திருக்கலாம். தொடர்ந்து நாக்கு அதனில் உரசும் நிலைமையாகில், நாக்கில் (அதன்
ஓரத்தில்) வெண்படலம் தோற்றமாகும். குறிப்பிட்ட பல்லை அகற்றின் ஆபத்தில் இருந்து விடுபடலாம்.
ஏ. பீடி புகைப்பவராகில் - உதட்டில் தொடர்ந்து சூடு பிடிக்க அக்கலங்கள் பாதிப்படையலாம். இதனால்
குறிப்பிட்ட இடத்தில் அசாதாரண வளர்ச்சி ஏற்பட்டுப் புற்றுநோய் உருவாகலாம்.
ஐ. இருபது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகங்களை கிராமமாகப் பரிசோதனை செய்தல் சாத்தியமாகும். இதன் மூலம் அசாதாரண வளர்ச்சி இருப்பின் இலகுவில் இனங்காணலாம். ஆபத்தில் இருந்து எம்மைப் பாதுகாக்கலாம் Pap semear test - அசாதாரண நிலைகானின் (பெண்குறியில்) நோய் நிலைமையை நிச்சயப்படுத்தலாம்.
02. பின்வரும் அறிகுறிகளில் எதாவது ஒன்றைக் காணின் புற்றுநோயாக இருக்குமோ என ஐயறிவு கொள்ள வேண்டும்.
அ. வாயின் எப்பகுதியிலாவது வெண்மையான படலம் அல்லது சிவப்புநிறமான நிறமாற்றம் (படலம்).
ஆ. உடலின் திறந்த - வெளிப்படுநிலை - மலவாசல், பெண்குறியில் இருந்து வழமைக்கு மாறாக இரத்தம் வெளியேறுதல், அல்லது கழிவு/ சீழ் நீர் கசிதல் முதலியன.
இ. மார்பகத்தில் கட்டி, உட்பகுதியில் கனமாதல்/ கட்டிபோல் உணர்தல். அல்லது உடலின் எப்பகுதியிலாவது கட்டி, அசாதாரண வளர்ச்சி அல்லது கறுப்புப்புள்ளி வளர்ச்சி பெறல்
.
ஈ. மாறாத நீண்டநாள் புண்.
உ. மலம் கழித்தல் - வழமைக்கு மாறாக தொடர்ந்து இருத்தல். சிறுநீர் தொடர்ந்து வெளியேறுதல் (வழமைக்கு மாறாக ).
ஊ. மருந்து எடுத்தும் மாற்றம் எதுவுமற்ற இருமல்.
எ. உணவு விழுங்குவதில் கஷ்டநிலை தொடர்ந்து இருத்தல் அல்லாதுவிடின் உணவு சமிபாடு இன்மை.
ஏ. உடலில் ஏற்பட்ட கட்டி அல்லது காய் நிறமாற்றம் அடைதல் அல்லது அதன் பருமனில் மாற்றம்.
ஐ. உடல் மெலிவடைதல், இரத்தச்சோகை.
ஒ. நோய் நிர்ணயம் பெறாது காய்ச்சல் தொடர்தல் முதலியன.
 பசியின்மை, உடம்பு மெலிதல் முதலியன பலகாரணங்களால் உருவாகலாம். ஆனால் பசியின்மை, உடம்பு
மெலிதல் முதலியன புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். களம், இரைப்பை, இரத்தப்புற்றுநோயாளர்
மத்தியில் இந்நிலைமை சம்பவிப்பதாகலாம். இந்நிலை கானின் வைத்திய உதவியை நாடுதல் மிகவும்
அவசியமாகும்.
 களத்தில் புற்றுநோய் தோற்றம் பெருமாகில் உட்கொண்ட உணவு கீழே கடத்தப்படுவதற்கு தடை
ஏற்படுவதை ஒருவர் உணரமுடியும். வேறு நோய்களாலும் இக்கஷ்டம் ஏற்படினும், நாற்பது வயதிற்கு
மேற்பட்டவர்களில் இவ்வறிகுறி தென்படின் நிச்சயமாக புற்றுநோய் என்பதை நாம்
அனுமானித்துக்கொள்ளலாம். இந்நிலைமை ஏற்படின் வைத்திய உதவியை உடன் நாடவும்.
 இரைப்பையில் புற்றுநோய் தோற்றம் பெறுமாகில்,
- உணவு சமிபாடு இன்மை தோற்றம் பெறலாம்.
- வழமையாக உண்ணும் உணவின் அளவு குறையலாம்.
- சாப்பாட்டில் பிரியமின்மை - வெறுப்பு முதலியன.
- மலம் கழித்தல் மாற்றம் - மிகவும் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மலச்சிக்கல். இதனை அடுத்து
வயிற்றோட்டம். மீண்டும் மலச்சிக்கல்; மலத்துடன் இரத்தம், சீதம் கலந்து வெளியேறின், பெருங்குடல்
தொடர்பான புற்றுநோயாகலாம்.
 குருதியிழப்பு, சீதம் கழித்தல்.
- மலவாசலில் குருதி, குருதியிழத்தல்- பெருங்குடலில் புற்றுநோயாகலாம்.
- சிறுநீருடன் இரத்தம் வெளியேறின் - சிறுநீரகத்தில் புற்றுநோயாகலாம்.
- இரத்த வாந்தியெடுத்தல் - இரைப்பையில் புற்றுநோயாகலாம்.
- ஒழுங்கின்றி அல்லது அதிகமாக இரத்தம் வெளியேறின் - கர்ப்பப்பை புற்றுநோயாகலாம்.
குறிப்பு:-
இத்தகைய குருதியிழப்புக்கு வேறுகாரணங்களும் உண்டு. எனவே வைத்திய ஆலோசனை அவசியம்
தேவையாகும்.
 மார்பில் கட்டி, உடலின் எப்பாகத்திலும் கட்டி அல்லது கழலை.
இவை சடுதியில் தோற்றம் பெருமாயின், சந்தேகத்திற்குரியதாக அமைய முடியும். குறைந்த விகிதத்தில்
வளர்ந்த கட்டி சடுதியாக வளருமாகில் இந்நிலை புற்றுநோயை சுட்டிக்காட்டுதல் ஆகலாம்.
சிலவேளைகளில் மிகவும் ஆறுதலாக வளரும் கட்டிகளும் புற்றுநோயாக அமைவதுண்டு. வைத்திய
ஆலோசனை பெறுதல் அவசியமே.
 உடலில் ஏற்பட்ட புண் மூன்று கிழமைகளாகியும் மாறாது இருப்பின்- வைத்திய ஆலோசனை அவசியமே.
 மூன்று கிழமைகளுக்கு மேலாக தொடர்ச்சியான இருமல் அல்லது குரல் அடைப்பு மாறாது இருப்பின்,
இந்நிலைமை குரல்வளைப்பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயை குறிப்பதாக அமையும்.
 உடலில் ஏற்பட்ட கட்டி அல்லது மச்சத்தில் சடுதியான வளர்ச்சி சம்பவிக்கில் அல்லது இரத்தம் வடியுமாகில்
புற்றுநோயாகலாம். இக்கட்டி நிறமாற்றம் ஏற்படல் அல்லது அதற்கு அருகில் புதிதாகக் கட்டி தோற்றம்
பெறல் முதலியனவும் இந்நிலையை சுட்டி நிற்பதாகக் கருதலாம்.
இவ்வறிகுறிகளை இனம் காணின் காலம் தாழ்த்தாது வைத்திய ஆலோசனை நாடுதல் அவசியமாகும்.

புற்றுநோய் ‪அதிகரிப்பதற்கான‬ ‪காரணிகள்‬

அ.மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்தல்
எமது நாட்டை பொறுத்தளவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 12% ற்கு மேற்படுவதாக அமையும்.
வயது கூடிய காலத்தில் உடற்கலங்கள்¸ உடலின் கட்டுப்பாட்டுக்கு அமைவாக அல்லாது செயற்பட முடியும்.
இதனால் அசாதாரண வளர்ச்சிகள் இலகுவில் சம்பவிப்பதாகலாம். ஆண்கள்¸ பெண்கள் என இருபாலாரிலும் இந்நிலைமை ஏற்படுவதாகலாம்.
ஆ.தனிநபர் சார்ந்த பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றம்.
1. மாறுபட்ட உணவுப் பழக்கவழக்கங்கள்.
• அதிக கொழுப்பு - புரத உணவுகளின் பாவனை. வசதி கூடியவர்களின் விரைவுணவுப் பாவனையின் தாக்கம் - மோகம்.
• செயற்கை உணவுகளின் அதீத பாவனை – நிறமூட்டிகள்¸ சுவையூட்டிகளின் பாவனை அதிகரிப்பு.
• நார்த்தன்மை குறைவான உணவுகளின் அதீத பாவனை; சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரித்த உணவுப்பாவனை அதிகரிப்பு.
இலைவகைகள் - காய்கறிவகைகளைத் தின உணவில் அதிகமானவர் சேர்ப்பதில்லை. மலச்சிக்கல்¸ அதன் பின்விளைவுகள்.
• மிதமிஞ்சிய உப்புப் பாவனை – எம்மவர் உணவில் கூடியளவு உப்புச் சேர்த்துப் பாவிக்கின்றனர்.
முன்பே தயாரித்த உணவில் கூடியளவு உப்புச் சேர்க்கப்பட்டுள்ளது. சு10ப் வகைகள்¸ பிஸ்கட் வகைகள்¸ தகரத்தில் அடைத்த உணவுகள்.
• பொரித்த உணவுகள்¸ பொரியல் வகை¸ பலதரப்பட்ட பலகாரக் கலவைகள் (Mixtures)
எண்ணெயில் தயாரித்த விரைவுணவுகளின் அதீதபாவனை. நிறமூட்டிய உணவுகள்¸ உறைப்பான உணவுகள்¸
பக்கற்றில் அடைத்த உணவுகளின் கூடிய பாவனை.
• அதிக சூடான உணவுகளின் பாவனை.
• பூஞ்சணம் பிடித்த உணவுகள் பாவனை. ஓடியல் வகை¸ அவல்¸ பாக்கு சீவல்¸ மோர் மிளகாய்¸
ஈரலிப்பு நிலையில் கூடிய காலம் வைத்திருக்கும் தானியங்கள் முதலியன.
• விற்றமின் A¸ இரும்புச்சத்துக் குறைவான உணவுகளின் பாவனை.
2. புகையிலையின் பாவனை – புகைத்தல்¸ புகைப்பவர் அருகில் இருப்போர்¸ வெற்றிலையுடன் சுண்ணாம்பு¸
புகையிலை பாக்கின் பாவனை. (நுரையீரல்¸ வாய்¸ தொண்டை¸ களம் முதலான பகுதிகள் பாதிப்படையலாம்)
3. தனிநபர் சுகாதாரம் சரிவரப்பேணப்படாமை. ஒழுங்கற்ற பற்கள்¸ உடைந்த பற்கள்¸
செயற்கை பற்கள் பாவனையில் தொடர் உறுத்தல் முதலியன வாய்ப்புற்று நோயின் தோற்றத்துக்கு வழிவகுப்பதாகலாம்.
4. மது அருந்துதல் - எரிவுத்தாக்கத்தினால் வாய்¸ தொண்டை¸ களம் பாதிப்படையலாம். ஈரல் பாதிப்பு – தொடர்ந்து புற்றுநோய் சம்பவிக்க முடியும்.
5. பாதுகாப்பற்ற பாலியல் பழக்கவழக்கம் - இதனால் வைரசுக்களால் ஏற்படும் புற்றுநோய் சம்பவிப்பதாகலாம்.
பாலுண்ணி வைரஸ்¸ பெண்களின் கருப்பைக் கழுத்துப் புற்றுநோயை ஏற்படுத்த முடியும்.
6. கெப்பரைரிஸ் (ஈரல் அழற்சி) வைரஸ் -Hepatitis ‘B’, Hepatitis ‘C’ காரணமாக ஈரல் புற்றுநோய் ஏற்பட முடியும்.
7. கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்¸ குதப்புற்றுநோய் முதலியன AIDS காரணமாக ஏற்படவாய்ப்புண்டு.
8. கறிவகைகளுக்கு சேர்க்கப்படும் சரக்குகள் வாய்க்குழி¸ களம்¸ இரைப்பை முதலானவற்றில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு.
9. சுற்றாடல் பாதிப்பு.
விவசாயத்திற்கான பீடைக்கொல்லிகளின் தீவிர பாவனை. இதனால் நாம் உண்ணும் மரக்கறி - இலைக்கீரை¸
பழவகைகளில் கிருமிநாசினித்தாக்கம் அதிகரிப்பு. மருந்து விசிறிய அடுத்த நாளே அவற்றை சந்தைப்படுத்துதல்.
இதனால் எம்மை அறியாது எமது நாளாந்த உணவோடு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனங்களை உட்கொள்ளும்
பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் இலகுவில் எம்மவர் புற்றுநோய்க்கு ஆளாக முடியும்.
10. பயிர்களுக்கு அபரிமிதமாக உரவகைகளை எம்மவர் கட்டுப்பாடு இன்றிப் பாவிக்கின்றனர்.
இவைகள் நிலத்தடி நீரைப் பாதிப்பதாகப் பரிசோதனை மூலம் விவசாய இலாகாவினர் கோண்டாவில் திருநெல்வேலிப்பகுதியில்
(யாழ்ப்பாண மாவட்டம்) இனம் கண்டுள்ளனர். (நைத்திரேற்றுக்கள் தாக்கம்).
11. மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன்களைப் பெண்கள் பாவிப்பதனால் மார்பகப் புற்றுநோய் அதிகளவில் சம்பவிப்பதாகக் காணப்படுகிறது.
12. தொழிற்சாலைக் கழிவுகள் வெளியேற்றம் - அதன் பாதிப்புக்கள்.
13. உடற்பயிற்சியின்மை – உடம்பு பருமன் அடைதல். இதனால் குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு.
14. பரம்பரை அலகுகள் - உதாரணமாக மார்பகப் புற்றுநோய் குடற்புற்றுநோய்¸ இரத்தப்புற்றுநோய் முதலானவைகள் சம்பவிப்பதாக அமைகின்றது.
15. அஸ்பெஸ்ரஸ் சீற் உற்பத்தி நிறுவனங்களில் கடமையாற்றுபவர்¸ தீந்தை பூசுபவர்¸ கப்பல் கட்டும் முயற்சிகளில்
ஈடுபடுபவர் மத்தியில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.
இவ்வம்சங்களையிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மிகவும் அவசியமாகும்.
இதன் மூலம் இந்நோயை ஆரம்பநிலையில் இனம் காணலாம். சுயநல மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுப்போமாகில்
இந்நோயின் தோற்றப்பாடே சம்பவிக்கமாட்டாது.
இ. புற்றுநோய்த் தாக்கநிலை
1. புகையிலை – 31% தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
புகையிலையில் உள்ள 4000க்கு மேற்பட்ட இராசாயனச் சேர்மானப் பொருட்களில் 43 சேர்மானப் பொருட்கள்
புற்றுநோயை ஊக்கிவிக்கும் சேர்மானம் என ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
2. ஆரோக்கியமற்ற உணவுகளால் உண்டான உடற்பருமன்.
•உயர் எடை கொண்ட பெண்கள் மத்தியில் மார்பகம்¸ சூல்சுரப்பி¸ கருப்பையின் அகவுறை முதலான உறுப்புக்களில் நோய் நிலை அதிகரிப்பு.
•ஆண்களின் சிறுநீர்ப்பையில் ஏற்படும் புற்றுநோய்க்கும் - உடற்பருமனுக்கும் தொடர்புகள். 40% க்கு மேல் ஆகும்.
•உணவுக்குழாய்¸ இரைப்பை மற்றும் சிறுகுடல் முதலானவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு – காரமான சிற்றுண்டிகள்¸
உப்பிட்ட (கூடுதல்) ஸ்னக்ஸ்/ விரைவுணவுகள்¸ புகையூட்டப்பட்ட உணவுகள் ஊறுகாய் முதலானவைகள் காரணமாகின்றன.
3. உடல் உழைப்பு இல்லாதோர்க்கு தேகாப்பியாசம் மிக மிக அவசியம். 5% நோயாளர் இவற்றில் அடங்குவர். பெருங்குடற்தொகுதி¸
மார்பகம்¸ சூலகம்¸ கருப்பை¸ சிறுநீர்ப்பை முதலான உறுப்புக்கள்; கழிவுப்பொருட்கள் குடலினூடாகச் செல்வதை தேகாப்பியாசம்
விரைவுபடுத்துவதாகலாம். இதனால் எந்தவொரு புற்றுநோய் ஊக்கியும் உடல் உள்அகவுறையில் தரிக்கும் வாய்ப்புத் தடைப்படுகிறது.
4. பரம்பரைக்காரணி – 5% வரை அடங்கும். புற்றுநோயால் இறப்போரில் இருபதில் ஒருவர் தமது பெற்றோரிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.
(பழுதுற்ற DNA முதலியன).
5. மிதமிஞ்சிய மதுபாவனை – 3% வரையில் அடங்கும். ஏனைய காரணிகளாவன சுற்றாடல் கதிர்வீச்சு – 2%; சுற்றாடல் மாசடைதல் 2%;
இனப்பெருக்க வரலாறு 3%; வைரஸ் மற்றும் நோய்த்தாக்கம் 5%; தொழில் துறைசார்பு நிலை 5%; முன்னைய மருந்துப் பாவனை 3%;
இதர காரணி 8%; மொத்தம் 100%.

‪தொண்டை‬,‪குரல்வளைப்‬ ‪புற்றுநோய்‬

இலங்கையில் வயதான ஆண்களில் தொண்டை,குரல்வளைப் புற்றுநோய் கூடுதலாகச் சம்பவிப்பதாகப் புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன.
.
01. தொண்டைப்பகுதியில் அடங்குவன.
அ. மூக்குக்குப்பின்னால் உள்ள பகுதி.
ஆ. வாய்க்குழிக்குப் பின்னால் உள்ள பகுதி.
இ. தொண்டையின் கீழ்ப்பகுதி முதலியன.
 குரல்வளைப்பகுதி
இது சுவாசத்துடன் தொடர்புடைய பகுதியாகும். இதன் கடமைகள்.
√ உணவு விழுங்கும் போது, நுரையீரலுக்குள் உணவு செல்லாது
தடைசெய்வதாக அமைகிறது.
√ காற்றை நுரையீரலுக்குள் செலுத்துதல்.
√ பேசுவதற்கு உதவுவதாகவும் அமைகிறது.
√ புற்றுநோய் ஒருவருக்குச் சம்பவிக்கையில் உண்பதும், விழுங்குவதும்,
துன்பியலாகவே அமைய முடியும். மேலும் குரல் கரகரப்பாகவும் அமைவதாகலாம்
.
02. இந்நோயின் தோற்றப்பாட்டுக்கு காரணமாக அமைவன:
√ மதுபானம் கூடுதலாக அருந்துதல்: சாராயம், கசிப்பு, கள்
முதலானவைகளை அருந்துதல்.
√ புகைப்பிடித்தல்: சிகரெட், பீடி, சுருட்டு அதீத பாவனை.
√ தொழில் சார்ந்த பாதிப்புக்கள்: அஸ்பெஸ்ரஸ் தயாரிப்புத் தொடர்பானதொழில்; சல்பூரிக்கமிலம் - புகையைச் சுவாசிக்கும் நிலை.
√ புகையிலை மெல்லுதல்.
√ மூக்குப்பொடிப் பாவனை.
√ போசாக்கின்மை - விற்றமின்கள், தாதுப்பொருட்கள் போதியளவு உணவில் சேர்க்கப்படாமை.
√ வைரஸ் தொற்று முதலியன
.
03. தொண்டை,குரல்வளைப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்.
√ உணவு உண்ணல், விழுங்குதல் கஷ்டம் ஏற்படும் நிலைமை -
தொண்டையில் - உண்ணாக்கு, அண்ணாக்கு, நாக்குப்பகுதி
முதலானவைகள் பாதிப்படையலாம்; இதனால் உண்பது, விழுங்குவது
கடினமாகலாம்; விழுங்குவது துன்பியலாக அமையமுடியும்.
√ குரல் நாணில் அசாதாரண வளர்ச்சி ஏற்படின், ஒலி ஏற்படுவதில்
மாற்றம் சம்பவிப்பதாகலாம். குரல் கரகரப்பாக அமையமுடியும்.
√ சுவாசம் துர்நாற்றம் மெலிட்டதாகலாம்.
√ மூச்சுவிடக் கஷ்டப்படுவர்.
√ இருமல் சளியுடன் இரத்தமும் காணப்படலாம்.
√ காதுப்பகுதியில் நோ ஏற்படும்.
√ நோய் மேலும் உறுப்புகளுக்குப் பரவியபின் - கழுத்துப் பகுதியில் உள்ள நிணநீர் முடிச்சுக்கள் வீக்கம் அடையலாம்
.
04. தடுப்பு முறைகளாவன
√ தவறான வாழ்க்கைப் பழக்கங்களான புகைத்தல், தரக்குறைவான பாதகமான உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை அதிகளவிலான மதுப்பாவனை முதலானவைகள் இந்நோயின் தோற்றப்பாட்டுக்குத் துணைபோவதாக அமைந்து விடுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்பவர்களாவோம்.

புற்றுநோய் இன்று யாருக்கு, எத்தனை வயதில், எந்த விதத்தில் வருகிறது

புற்றுநோய் இன்று யாருக்கு, எத்தனை வயதில், எந்த விதத்தில் வருகிறது என்றே தெரியவில்லை, ஆனால் அது வந்துவிட்டால் அந்த நோயைக் குணப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படிக் குணப்படுத்தவது என்றால், அதற்குக் கடுமையான பக்க விழைவுகள் கொண்ட மருந்து மாத்திரைகளைக் கொடுத்துத் தான் சிகிச்சை செய்ய முடியும். இருந்தாலும், இப்படி மருந்து மாத்திரை கொடுத்துக் கூட உயிர் பிழைக்கலாம் என்பது நிச்சயம் இல்லை. எனவே, இந்த நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பது தானே நல்லது, நண்பர்களே? அதற்கு ஒரு இலகுவான வழி கூட இருக்கிறது!
இஞ்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்! இஞ்சியில் காணப்படும் மஞ்சள் (Turmeric) எனப்படும் மூலிகை, புற்றுநோய் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஏன், புற்றுநோய் இருப்பவர்களின் டியூமர் கட்டியின் (tumor) அளவைக் கூட இஞ்சி சாப்பிட்டுச் சிறிதாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்கள்.
உதாரணத்திற்கு இந்த ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட ஆய்வுக்கூடத்தில் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (Prostate Cancer) உள்ள எலிகளுக்கு இஞ்சி கொடுத்து சிகிச்சை செய்த போது, அதனது டியூமர் கட்டிகளின் அளவு 56 சதவீதத்திற்குக் குறைந்து இருக்கின்றது என்பதை அவதானித்துள்ளார்கள். தொடர்ந்து பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இஞ்சி மேலும் 101 விதமான நோய்களைக் குணப்படுத்தவும், அந்த நோய்கள் வராமல் இருக்கவும் மிகவும் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
நண்பர்களே இதில் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்: இஞ்சி சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது என்றும், புற்றுநோயை இஞ்சி சாப்பிட்டு நிச்சயமாகக் குணப்படுத்தலாம் என்றும் கூறப்படவில்லை! புற்றுநோய் வருவதன் வாய்ப்பைக் குறைக்கலாம் என்று மட்டுமே தான் சொல்லப்படுகிறது.
நாம் சாதாரணமாக நமது உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்று எதிர்பார்த்து இருப்பீர்களா?
நன்றி:-Niroshan Thillainathan

புற்றுநோயை‬ ‪எதிர்கொண்ட‬ ‪‎நேரடி‬ ‪அனுபவம்‬


"எனது உடல்நிலை சரியில்லை - மாற்றம் அடைவதாக உணர்கிறேன்" என எனது
மனைவியிடம் முறையிடுவேன். எனது கை,கால்கள் குளிர்வதை உணர்வேன்.
தொடரான தாகம். காலையில் தலையிடி. படிப்படியாக எனது எடை குறைகிறது.
"இவ் அறிகுறிகள் எதுவும் எனக்கு ஆபத்தாக இருக்கலாம்" என யான் உணரவில்லை,
எனக் குறிப்பிட்டார் டேவிட். இப்போது எனக்கு 54 வயதாகிறது. தினமும் காலையில்
மூன்று மைல்கள் வரையில் வேகமாக நடப்பவன். எனது உடம்புக்கு என்ன ஆச்சு என
ஆச்சரியப்பட்டேன். 'எனக்கு நீரழிவாக இருக்கலாம்' என சிந்தித்தேன். கட்டிலில் சரிந்தபடியே மனப் போராட்டம் நடந்தது. திரும்பத் திரும்ப எனது மனைவியிடம் வருந்துவேன். (Boring)
'வைத்தியரைப் போய்ப் பாரும் எனக் கூறியபடியே நித்திரையாகிவிட்டார்.
இந்நிலையில் யான் வேலை செய்யும் கொம்பனிக்குப் பொறுப்பான வைத்தியரைச்
சந்திக்க முடிவுசெய்தேன். நிறுத்துப் பார்த்தபோது 4 கிலோ எடை குறைந்து காணப்பட்டது.
எனது காற்சட்டை மிகவும் தொய்ந்தும், கழருவதுபோல் இருந்ததும், எனது எடை
குறைந்தமைக்கான காரணம் என்பதையும். அறிந்து கொண்டேன். எனது மேலாடையைக் கழற்றியபின் ECG எடுத்தார்கள். மீண்டும் அணியும் போது என்னை அண்மையில் ஏற்பட்டதா?" அவதானித்த வைத்தியர் "உமது முதுகில் ஒரு கறுப்பு அடையாளம் இருக்கிறது? என வினா எழுப்பினார்.
நான்கு மாதங்களுக்கு முன் இவ் அடையாளத்தை அவதானித்தேன். எமது அறைக்
கண்ணாடியில் யான் முகச்சவரம் செய்யும் வேளையில் எனது வலது காதுக்குக் கீழ் எனது முதுகைத் திடுக்கென்று பார்த்தேன். (Swiveling) அவ்வேளையில் எனது நடுப்பகுதியில் கன்னங்கரேலென்ற (jet black) இப்புள்ளியைக் கண்டேன்.(half the size of a dime).
அது ஒரு பிறப்பு அடையாலமாகலாம் எனச் சிந்தித்து எனது மனையாள்
மேரியிடம் வினவினேன். அவருக்கும் அதை அவதானித்ததாகக் கூறிக்கொள்ள
முடியவில்லை. 'கறுப்புப்புள்ளியை அகற்றி விடுவோம்' என வைத்தியர் குறிப்பிட்டார்.
சருமரோக வைத்திய நிபுணரிடம் தொடர்பு கொண்டு திகதியை நிர்ணயித்தார்.
அடுத்த திங்கள் சத்திரசிகிச்சை (சிறியஅளவு) மூலம் கறுப்பு அடையாளத்தை அகற்றிவிட்டார்.அதில் குறிப்பிட்ட மாதிரித்துண்டை ஆய்வு கூடப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
உடன் பதில் தரவேண்டும். Important எனக்குறிப்பிட்டு இருந்தார்.
முதன்முதலில் வைத்தியர் அறிவுறுத்திய தன்மையின் காரணத்தினால் அக்கருப்பு அடையாளம்
(Malignant) உயிராபத்தானதாக அமையுமோ என என் ஆழ்மனதில் பதியலாயிற்று.
வைத்தியர் உடனடியாகத் தன்னை இன்று பி.ப.7.30க்குச் சந்திக்குமாறு அழைப்பு விடுத்தார்.
நீரழிவாகத்தான் இருக்கும் என நான் முதலில் சிந்தித்தேன். 'உமக்குச் சிறிய அளவில்
Melanoma-புற்றுநோய்' அச்சிறிய அளவிலான கலத்தை Lesion இலகுவாக அகற்றிவிடலாம்.
நீர் அதையிட்டு பயப்படத்தேவையில்லை' என வைத்தியர் குறிப்பிட்டார். இருந்தபோதிலும் எனது கை நடுங்குவது போல உணர்வு மேலோங்கிற்று.
அடுத்த வெள்ளி சத்திரசிகிச்சை நிபுணரைச் சந்திக்கும் ஏற்பாடு செய்தோம். மேலாடையைக் கழற்றிய பின்பு எனது உடலை முழுமையாக பரிசோதித்தார். மிகவும் கடினமான நிலையில் புற்றுநோய் காணப்படுகின்றது. இந்நிலைமையில் அண்மையில் உள்ள ஏனைய பகுதிக்கும் பரவும் சாத்தியம் உண்டு. இவ்வார்த்தைகளை உச்சரிக்கும்போது தமது எதுவிதமான
உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை. ஒரு கடுதாசியில் எவ்விதமாக சத்திரசிகிச்சை அமையலாம் எனக் கோடிட்டுக் காட்டினார்; முதுகில் ஒரு baseball அளவு அகற்றும் நிலைமை ஏற்படலாம். இந்நோய் மேலும் பரவாது இருப்பின் 80% வரையில் குணமாகும் சந்தர்ப்பம் உண்டு. (அதாவது சுவாசப்பை, ஈரல் (Liver) முதலியன). இவை மேலிடங்களுக்குப் பரவியிருக்குமாயின் பெரிய ஆபத்தாகலாம். (then you're in the big leagues') இச்செய்தியைக் கேட்டதும் நான் பயப்படவில்லை.
மனம் பேதலிக்கவும் இல்லை. (Revulsion) அதிர்ச்சியடையவும் இல்லை. நீதிபதி
மரணதண்டனையை அறிவித்தபோது ஏற்படும் நிலைமை போல் உணரலானேன்.
இன்னொரு வைத்தியரின் மேலான ஆலோசனையையும் பெறுவோம் (Second opinion)
எனக் கூறி வைத்தியர் தொடர்பு மேற்கொண்டார். முப்பது நிமிட இடைவெளியில்
வைத்திய நிபுணர் வந்து சேர்ந்தார். அவர் அவதானித்ததும் காலம் தாழ்த்தாமல் சத்திரசிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறினார். அதன்படி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை அடுத்து, நோயாளி குணம் அடையும் பிரிவுக்கு மாற்றப்பட்டேன்.
"நன்கு ஆழமாக சுவாசியும் டேவிட் " எனத் தாதி வேண்டினார். எனது வலது கை எனது வயிற்றுடன்
இணைத்து ரேப் பண்ணியிருந்ததை உணரலானேன். மேரி எனது வரவை ஆவலோடு
எதிர்பார்த்திருந்தார். பிரகாசமான முகத்தைக் கண்டேன். 'எப்படியாக உணருகிறீர்கள்' How do you feel? என வினாவினார். நன்று, இறை ஆசியினால் காப்பற்றப்பட்டுள்ளேன்.
அடுத்தநாள் காலையில் எனது கால்கள் உறுதியாக இருந்தன. எனது தலை/ மனம் தெளிவாக இருந்தது. நான் ஓடாவிடினும், என்னால் நடக்கமுடியும் எனத் தெரிந்து கொண்டேன். எனது நண்பர்கள் என்னைப் பார்க்கவும், ஆறுதல் வார்த்தைகள் தரவும் வருகை தந்தார்கள்.
ஒருசிலரின் நீண்ட பார்வை, 'எனது நண்பனே, நீ இறக்கும் தருவாயில் இருக்கிறாயா?' எனக் கேள்வி
எழுப்புவது போல் இருந்தது' என உணரலானேன். ஆய்வுகூட அறிக்கையை எதிர்பார்த்திருந்தேன்.
அடுத்தநாள் காலையில் சத்திரசிகிச்சை நிபுணர் வந்ததும், உமது உடலில் ஏனைய
எப்பகுதிக்கும் புற்றுநோய் பரவவில்லை. நீர் அமைதியாக செல்லலாம்.' எனத் தெம்பூட்டினார்.
ஆண்டவருக்குத் தோத்திரம் செய்து, நன்றி தெரிவித்தேன். என்றார் டேவிட்.
குறிப்பு:
1. ஆரம்ப அறிகுறி
- கைகள், கால்கள் குளிரும் நிலைமை.
- தொடரான தண்ணீர்த் தாகம்.
- தலையிடி
- படிப்படியாக எடை குறைதல்.
- விபரிக்கமுடியாத உடல் அசதி முதலியன.
2. இவ்வறிகுறிகள் எதுவாக இருக்கலாம் என்பதை டேவிட் குடும்பத்தினர் அறிந்திருக்கவில்லை.
3. ஆரம்பநிலையில் வைத்திய ஆலோசனை பெற்ற நிலைமையினால் உயிராபத்தில்
இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
4. 50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கிராமமாகப் பரிசோதனைக்கு ஆளாதல் மிகவும்
அவசியமாகும்.

‪நிறைவான‬ ‪உணவை‬ ‪உண்டு‬ வளமாக‬ ‎வாழ்வோம்‬...

இன்று நாம் இயந்திர மயமான உலகில் வாழ்கின்றோம். காலையிலிருந்து இரவு வரை வேலை, படிப்பு. டிவி பார்த்தல் என நேரம் போய் விடுகின்றது. இதனால் நாம் உண்ணும் உணவைக் கவனிப்பதில்லை. இலகுவாகச் சமிபாடடையக் கூடிய, விரைவாகத் தயாரிக்கக் கூடிய பதப்படுத்தப்பட்ட மற்றும் பொதி செய்யப்பட்ட உணவு வகைகளை நாடுகின்றோம். நிறைவான உணவு உண்ணப்படாததினால் எமது உடற் பருமன் அதிகரிக்கின்றது. அத்துடன் விற்றமின்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதக்குறைபாடுகள் ஏற்பட இடமுண்டு, நாம் போதிய உடற்பயிற்சிகளையோ உடலை வருத்தி வேலைகளையோ செய்வதில்லை. இதனாலும் உடற்பருமன் அதிகரிப்பதுடன் சலரோகம், உயர்குருதியமுக்கம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றன.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு எத்தகைய உணவை உண்ண வேண்டும் என்று பார்ப்போம். ஆரோக்கியமான உணவென்பது எல்லோருக்கும் பொதுவானது. சிறுவயது முதல் நாம் ஆரோக்கியமான உணவு (Healthy diat) உணவைப் பழகிக் கொள்ள வேண்டும்.
நாம் எமது உணவில் அதிகளவு பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள் எமக்கு விற்றமின் C, விற்றமின் A போன்ற அத்தியாவசிய விற்றமின்களை வழங்குகின்றன. பழங்களில் உள்ள பொட்டாசியம் குருதியமுக்கத்தைக் குறைக்கின்றது. பழங்களில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுகிக்கின்றது. இதனால் பெருங்குடல் புற்றுநோய், மூல நோய் (Piles) போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது குறைகின்றது. நீரிழிவு நோயுள்ளவர்கள் அதிக இனிப்புள்ள மாம்பழம், பலாப்பழம் என்பனவற்றைத் தவிர்ப்பது நல்லது. அவர்கள் கதலி அல்லது இதரை வாழைப்பழம், பச்சை அப்பிள், விளாம்பழம், பப்பாசிப்பழம், கொய்யா, நாவல் ஆகியவற்றை உண்ணலாம். சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகள் பழங்களை முற்றாகத் தவிர்ப்பது நல்லது.
பழங்களைப் போலவே மரக்கறி வகைககள் மற்றும் கீரை வகைகள் மிகுந்த பயனைத்தருகின்றன. அவை உடலுக்குத்தேவையான விற்றமின்கள், கனியுப்புக்களைத் தருவதுடன் நார்ச்சத்தையும் தருகின்றன.
பயறு, கடலை, கௌபி, சோயா, அவரை போன்றவை எமக்குப் புரதச் சத்தையும், இரும்புச் சத்தையும் வழங்குகின்றன. இவற்றில் காபோவைதரேற்றுக்கள் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை சிறந்தவை.
தானிய வகைகளைப் பொறுத்தவரை தீட்டப்படாத முழுத்தானியங்களே சிறந்தவை. தீட்டாத அரிசயில் நார்ச்சத்தும், விற்றமின் B ம் அதிகம் உள்ளன. ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த நாங்கள் அதிக மாச்சத்துள்ள சோறு மற்றும் அரிசிமா, கோதுமைமாப்பண்டங்களை அதிகளவில் உண்கிறோம். உடலை வருத்தி வேலை செய்யதாவர்களுக்கு இது தீங்கானது. எனவே நாம் மரக்கறி வகைகளை அதிகமாகவும் மாச்சத்துள்ள உணவுகளை குறைவாகவும் உண்ண வேண்டும். மாவகைகளில் ஆட்டாமா சிறந்ததாகும்.
எண்ணை வகைகளை உணவில் குறைத்துக் கொள்வது நல்லது. நிரம்பிய கொழுப்பமிலங்களால் ஆன (Saturated fattyacids) மரக்கறி எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்பன இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே அவற்றின் பாவனையைக் குறைப்பது நல்லது. Non unsaturated fat ஆல் ஆன ஓலிங் எண்ணெயே மிகச் சிறந்த எண்ணெய் ஆகும். இது நல்ல கொலஸ்ரோலை HDE Cholostorol கூட்டிக் கூடாத கொலஸ்ரோலைக் (LDL Cholostorol) குறைக்கும் Polyunsaturatedfat எனப்படும் நிரம்பாத கொழுப்பமிலங்களையுடைய சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், நல்லெண்ணெய் என்பவை பொதுவாகக் கொலஸ்ரோலைக் குறைவடையச் செய்வதனால் பாவிக்க உகந்தவை. மாஜரீன் மற்றும் பிஸ்கட் வகைகளில் Trans Fattyacid என்ற தீங்கான கொழுப்பமிலம் உள்ளது இது இருதய நோய்களை எற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது.
பால் ஒரு நிறையுணவு வளரும் பிள்ளைகளுக்கு பால் புரதத்தையும், கல்சியம், மற்றும் விற்றமின்களையும் வளங்குகின்றது. பாலிலுள்ள பிரச்சினை அதிலுள்ள கொலஸ்ரோலும் நிரம்பிய கொழுப்புமாகும். எனவே கொலஸ்ரோல் அதிகமுள்ளவர்கள் பசுப்பாலையும் முழு ஆடைப்பால்பால்மாக்களையும் தவிர்த்து கொழுப்பற்ற பால்மாவைப் பயன்படுத்தலாம். மாமிசம் உண்ணாதவர்களுக்கு ( Vegetarians) விற்றமின் B12 பாலின் மூலம் மட்டுமே கிடைப்பதால் கட்டாயம் அவர்கள் பால் அருந்த வேண்டும்.
மீன் எமக்குத் தேவையான புரதம், கல்சியம், விற்றமின்கள், அயடீன் என்பவற்றை இது அளிக்கிறது. மீனிலுள்ள கொழுப்பில் ஓமேகா – 3 எனும் கொழுப்பமிலம் உள்ளது. இது இருதய நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. பெரிய மீன்கள் தீங்கானவை என்ற கருத்து நம்மிடையே உள்ளது இது தவறானது.
இறைச்சி வகைகளில் கோழி இறைச்சி ஆரோக்கியமானதாகும். மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என்பவற்றில் நிரம்பிய கொழுப்பமிலங்கள் ( Saturated fat) கொலஸ்ரோல் என்பன அதிகமுள்ளதால் தவிர்ப்பது நல்லது இவை ( Red meat ) புற்றுநோயையும் ஏற்படுத்தக் கூடும்.
உணவில் உப்பை முடியுமான வரை குறையுங்கள் உயர் குருதியமுக்கம் உள்ளவர்கள் அதிக உப்புள்ள சூப்வகைகள், கருவாடு என்பவற்றை தவிர்க்க வேண்டும்.
எந்த வயதினராக இருந்தாலும் எல்லோருமே இனிப்பு வகைகளைக் குறைக்க வேண்டும். இனிப்புள்ள மென் பானங்கள், ஐஸ்கிரீம், இனிப்பு பிஸ்கற்றுக்கள், கேக் என்பவற்றைத் தவிர்க்க வேண்டும். தாகமாக இருக்கும் போது மென்பானங்களைத் தவிர்த்து நீரை அருந்த வேண்டும்.
கூடுமான வரை இயற்கையான புதிய உணவுகளை உண்ணுங்கள், பதப்படுத்தப்பட்ட பொதி செய்யப்பட்ட உணவுகளிலுள்ள இரசாயனப் பொருள்கள் உடலுக்கு தீங்கிழைக்கலாம்.
ஒவ்வொரு நாளும் போதுமான அளவு நீரை அருந்துங்கள், வளர்ந்த ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு தொடக்கம் இரண்டரை லீற்றர் கொதித்தாறிய நீரைப்பருக வேண்டும். இதன் மூலம் சிறு நீரகக்கற்கள், சிறு நீர்க்கிருமித் தொற்று என்பவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கிய உணவான பால், வயது வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானது, ஆரோக்கிய உணவு உண்பதன் மூலம் நீரிழிவு உயர் குருதியழுத்தம், கொலஸ்ரோல் போன்ற நோய்களில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நோய் வாய்ப்பட்ட பின்னர் உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதை விட வருமுன்னர் காப்பதே சிறந்தது.
Dr.S.கேதீஸ்வரன்
பொது வைத்திய நிபுணர்

மதுவை நிறுத்துவதில் மருந்துகளின் பங்களிப்பு


அநேகமான மக்கள் நம்புவதுபோல் மது பாவிப்பதனை மாத்திரைகள் பாவித்தோ அல்லது ஊசிகள் போட்டோ மறந்துவிடச் செய்ய முடியாது.
உண்மையில் மதுவிலிருந்து ஒருவர் விடுபட விரும்பினால், மதுவானது தனக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது என்ப தனை உணர்ந்து கொண்டு, தன்னுடைய மன வலிமையின் துணைகொண்டு அதிலிருந்து விடுபடுதலே சாத்தியமானதாகும்.
அவ்வாறன்றி மதுவை நினைத்தவுடன் மறப்பதற்கான, மது இருக்கும் திசையையே நாடாமலிருப்பதற்கான, அதிசயமளிக்கும் மருந் துகள் எவையும் இதுவரை கண்டு பிடிக்கப்பட வில்லை.
ஆயினும் மது அடிமை நிலையிலிருந்து வெளிவர விரும்பும் சிலருக்கு சிலவேளை களில் Disulfram (டைசல்பிடுரம்) என்ற குளி சையைப் பாவிக்குமாறு ஆலோசனை வழங் கப்படுவதுண்டு. டைசல்பிடுரம் பற்றிய சில விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மதுவைப் பூரணமாக நிறுத்துவதற் கான சிகிச்சையின் ஒரு படிநிலையில் மது பாவனையாளர் தமது மனக்கட்டுப்பாட்டுடன் மீண்டும் மதுவை நாடாமலிருப்பதற்கு உதவி செய்யுமுகமாக “டைசல்பி(F)ரம்” குளிசைகள் கொடுக்கப்படுகின்றன.
இந்தக் குளிசையை உட்கொண்டு விட்டு ஒருவர் மது அருந்துவாராயின், அவருக்குத் தீவிரமான, தாங்க முடியாத உடல் உபா தைகள் ஏற்படும். வயிற்றைப் பிரட்டுதல், வாந்தி, நெஞ்சடைத்தல், முகம் சிவத்தல், குரு தியமுக்கம் குறைதல், தலை சுற்றுதல், மயக் கம் வருதல் எனப் பல்வேறு விதமான, கடுமை யான ஆபத்தை விளைவிக்கக் கூடிய அறிகுறி கள் ஏற்படும். இந்த அறிகுறிகளை அனுபவித்த அல்லது அவற்றைப்பற்றி அறிந்துகொள்ளும் நபர்கள் இந்தக் குளிசையை எடுக்கும் வரை தாமாகவே மது அருந்துவதைத் தவிர்த்துக் கொள்வர்.
குணமடைந்து கொண்டுவரும் ஒரு மதுஅடிமை நோயாளி, குறிப்பிட்ட காலத்திற்கு இந்தக் குளிசையை நாள்தோறும் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனை உறுதியாகப் பின்பற்றுவதற்கு அவரது குடும்ப உறவினர் ஒருவர் உதவி செய்யலாம். மதுவுக்கு அடிமையான ஒருவர் மது வில்லா வாழ்க்கையை வாழ்வதற்கு “டைசல்பி(F)ரம்” எனப்படும் இம்மருந்து பெருமளவு உதவி புரியும்.
மது பாவிக்காத வேளைகளிலும் இந்த குளிசைகளினால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றி வைத்தியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தக் குளிசை பாவிக்கின்ற பொழுது மது அருந்தினால் எவ்வாறான உபாதைகள் ஏற்படும் என ஒருவர் அறிய விரும்பினால் அல்லது அனுபவிக்க விரும்பினால் அதற்கு “வெறுப் பேற்றும் சிகிச்சை” (Aversion therapy) என்கின்ற ஒரு சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆரோக்கியமாக‬ ‪வாழ‬ ‪சிறந்த‬ ‪நற்பழங்கள்‬

இயற்கையன்னை எமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவைகள் மிகுந்த பழங்கள் ஆகும். பழங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்ல, ஒரு முழு உணவாகக் கொள்ளக்கூடியவை. ஒவ்வொரு பழமும் அது சிறியதோ, பெரியதோ பல ஊட்டச்சத்துக்களைத் தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. பழங்களை எம் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது என்பது யாவரும் அறிந்ததே.
பழங்கள் மிக வேகமாக சீரணமடையக் கூடியவையாதலினால் இவற்றைத் தனியாக உண்பதுதான் நல்லது. பொதுவாக இரவில் மற்ற உணவுகளைத் தவிர்த்து, பழங்களை மட்டும் உட்கொள்வது சாலச் சிறந்தது.
இனி சில முக்கியமான பழங்கள் பற்றியும் அவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது பற்றியும் அவற்றைச் சாப்பிடுவதன் பயன்கள் பற்றியும் பாா்ப்போம்.
கனிகளின் அரசன் எனக்கருதப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதல் கனி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதில் பழச்சர்க்கரை, புரதம் இவற்றுடன் விட்டமின் ஏ, பி, சி ஆகிய அனைத்தும் உள்ளன. மாம்பழம் இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தக்கூடியது. இரவில் மாம்பழமும் ஒரு குவளை பாலும் அருந்துவது உடல் நலத்திற்கு மிக நல்லது. மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது, ஏனெனில் தோலில்தான் அதிக அளவு விட்டமின் சி காணப்படுகிறது. மேலும், கால்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரம் இதில் அதிக அளவு உள்ளது.
முக்கனிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பலா. பலாப்பழத்தில் விட்டமின் ஏ,சி மற்றும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் முதலிய தாதுப்பொருட்கள் காணப்படுகின்றன. பலாக்கொட்டையின் விட்டமின் பி1 மற்றும் பி2 அடங்கியுள்ளன. நன்கு பழுத்த பலாச்சுளைகளை மட்டுமே உண்ணவேண்டும், பழுக்காத பலாப்பழம் மற்றும் சமைக்காத பலாக்கொட்டையைச் சாப்பிடுவது செரிமானத்தைப்பாதிக்கக்கூடியது.
வாழைப்பழமானது முக்கனிகளில் மூன்றாவது இடத்தைப்பிடிக்கின்றது. இது விலை மலிவானதாக, ஏழைமக்களும் எளிதில் வாங்கி உண்ணக்கூடியதாகவும் இருக்கின்றது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் இது மற்றப் பழங்களுக்கு சற்றும் சளைத்ததில்லை என்பதற்கு சான்று. மூலநோயினையும் மலச்சிக்கலையும் எளிதில் தீர்க்கக் கூடியதான இப்பழம், அனைத்து விட்டமின்கள், தாதுப்பொருட்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஏராளமான பொட்டாசியம் இதில் அடங்கியுள்ளது. கண்பார்வைக்கோளாறுகளைத் தீர்க்கக் கூடியது என்று இப்பழம் கருதப்படுகிறது. வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் உடல் பருமனை அதிகப்படுத்தும் என்பதால், எடைக்குறைப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் இதனை அதிக அளவு உட்கொள்ளக்கூடாது.
பப்பாளியில், பழச்சர்க்கரைகளான குளுகோசும், ஃபிரக்டோசும் சம அளவில் காணப்படுகின்றன. நன்கு கனிந்த பப்பாளியில் ஏராளமான விட்டமின் சி, விட்டமின் ஏ, குறைந்த அளவில் விட்டமின் பி1, பி2 மற்றும் செரிமானத்துக்கு உதவும் பப்பாயின் என்ற நொதியப்பொருள் ஆகியவை அடங்கியுள்ளன. வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல், செரிமானமின்மை இவற்றுக்குக்கு அருமருந்தாகத் திகழும் பப்பாளி, கல்லீரல், கணைய மற்று சிறுநீரக நோய்களைக்கட்டுப்படுத்துவதுடன், பெண்களுக்கு மாதவிலக்கின் பொழுது ஏற்படும் சிக்கல்களைப் போக்கவும் உதவுகிறது. பழுக்காத பப்பாளியைச் சாப்பிட்டால், குடல்புழுக்கள் வெளியேறும். இதில் உள்ள கார்பின், பைப்ரின் போன்றவை இதயத்திற்கும், இரத்தம் உறைதலுக்கும் துணைபுரிகிறது.
இரும்புச் சத்து அதிகமுள்ள மாதுளை, இரத்தத்தில் சிவப்பு அணுக்களை அதிக அளவு உற்பத்தி செய்யத் துணை புரிகிறது. உடலில் ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதில் பங்கு வகிக்கிறது. இதய நோய்களைக்கட்டுப்படுத்துவதிலும், கொழுப்புச்சத்தினைக்குறைப்பதிலும் முக்கியப்பங்காற்றும் மாதுளை, பெண்களுக்கு மார்பகப்புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடிய தன்மை படைத்தது.
இதில் விட்டமின் சி குறைவுதான் எனினும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆப்பிளில் அடங்கியுள்ள சில வேதிப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கக்கூடியவை. இது புற்றுநோயினைக்கட்டுப்படுத்தக்கூடியது என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கலோரி குறைவு (Negative Calorie) என்பதால் உடல் எடையினைக் கட்டுப்படுத்துவதற்கும் இது உதவுகிறது. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகை வேதிமங்கள் மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதுகாப்பதால், அல்சைமர், பார்கின்சன் நோய்களில் இருந்தும் ஆப்பிள் சாப்பிடுவது மூலம் விடுபடலாம்.
கறுப்பு மற்றும் பச்சை நிறத்தில் கிடைக்கும் திராட்சையில் பலவகைகள் உண்டு. இது பெரும்பாலும் நீராலும், மாவுப்பொருட்கள் மற்றும் சியல் தாதுப்பொருட்களை உள்ளடக்கியதாவும் உள்ளது. திராட்சையில் ஃபிரக்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், கார்போஹைடிரேட் மற்றும் மாலிக் அமிலம், சிட்ரிிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், தாமிரம், பொட்டாசியம் முதலியனவும் அடங்கியுள்ளன. இது இரும்புச்சத்து அதிகம் உள்ளமையால், பெண்களுக்குப் பொதுவாக ஏற்படும் மாதாந்தத்தொல்லைகளைக் கட்டுப்படுத்துவதுடன் உடலுக்கு பலம் தருகிறது. அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் உலர்திராட்சையை மட்டுமே உண்பது நல்லது, திராட்சை எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியைத் தருவதுடன், இதயத்துடிப்பை சீராக்கவும் உதவுகிறது.

‎வாய்ச்‬ ‪சுகாதாரம்‬

ஆறு மாதத்திற்கு ஒருமுறையேனும், முகம் பார்க்கும் கண்ணாடியில் எமது வாயை நன்கு அவதானிப்போம். நல்ல வாய்ச்சுகாதாரம் பேணுதல்; நல்ல பழக்கவழக்கங்களைக் கையாளுதல், சரியான பற்சிகிச்சை பெறுவதன் மூலம் வாய்ப்புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
• ஆரம்ப காலத்தில் இலகுவில் இனம் காணலாம்.
• இனம் காணின் இலகுவில் கட்டுப்படுத்தலாம்.
#01. அவதானிக்கக்கூடிய அசாதாரண நிலைகள்:
• உடைந்த கூரான பற்கள்/துண்டுகள், அவை நாக்கு,கன்னம், அண்ணம் முதலான பகுதிகளைத் தொடர்ந்து உரசின், குறிப்பிட்ட பகுதியில் உள்ள கலங்கள் பாதிப்பு. இதனால் அவை அசாதாரணமாக வளரலாம்.வெண்படலமாக மாறுதல். புண்ணாதல்
.
• வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை முதலானவைகளைக் கொடுப்புக்குள் நீண்ட நேரம் வைத்திருத்தல். இதனால் அக்கலங்கள் அழிய நேரிடல்.அசாதாரணமான வளர்ச்சிக்கு வாய்ப்பு - வெண், செம்மை, கலந்த படலங்கள்.
• பீடி பிடிப்பவர்கள் உதட்டில் - தொடர்ந்து சூடு பிடிக்கில் உதட்டில் உள்ள கலங்கள் வரட்சியடைதல்; கலங்கள் சிதைதல்.
• கட்டுப்பற்கள் / அவைகள் அண்டும் பிரதேசங்கள் தொடர்ந்து நெருடல் - கலங்கள் அழிதல் - அசாதாரண வளர்ச்சிக்கு வழிவகுத்தல். வெண்படலமாகலாம்.
குறிப்பு:
1. குறிப்பிட்ட காரணிகளை இடைநிறுத்தின், மீண்டும் சுமூகநிலைமை திரும்பும். இவையே முதலாம் படியாகும்
2. தவறின் குறிப்பிட்ட பகுதி வெடிக்கலாம். பூக்கோவா போன்று மாறலாம். வைத்திய ஆலோசனை தேவையாகும்.
#02. வாயைச் சுயமாகப் பரீட்சித்துப் பார்க்கும் முறை.
நல்ல வெளிச்சமுள்ள இடத்தில், முகம் பார்க்கும் கண்ணாடி முன்நின்று எம்மால் செய்யமுடியும்.
1. முதலில் எமது கைகளைச் சவர்க்காரம் இட்டுக் கழுவுதல்
2. செயற்கைப் பல் பூட்டுக்கள் இருப்பின் அவற்றைப் பக்குவமாகக் கழற்றிக்கொள்வோம்.
3. வாயைக் கழுவி நன்றாகச் சுத்தம் செய்வோம். பின் அவதானிப்போம்.
‪#‎கீழ்‬ உதடு: இரண்டு கைகளின் பெருவிரல்களையும், ஆள்காட்டி விரல்களையும் பாவித்து கீழ் உதட்டைப் பிரட்டிக் கீழே இழுத்து பரீட்சிப்போம்.
‪#‎மேல்‬ உதடு: இரண்டு கைகளின் பெருவிரல்களையும், ஆள்காட்டி விரல்களையும் பாவித்து மேல் உதட்டை மேற் பக்கமாக இழுத்து பரீட்சிப்போம்.
‪#‎கன்னத்தின்‬ உட்புறம்: வாயை திறந்து வலக்கையின் பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து வலப்பக்கம் இழுத்து வலப்பக்கக் பாவித்து வலப்பக்கம் இழுத்து வலப்பக்கக் பார்க்கவும். அதே விதமாக வாயைத் திறந்து இடக்கையின் பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து, வாயின் இடப்பக்கக் கன்னத்தின் உட்புறத்தைப் பரீட்சிக்கவும்.
‪#‎நாக்கு‬: வாயைத் திறந்து முடிந்தளவு நாக்கை வெளியே நீட்டி நாக்கின் தொடக்கம் முதல் கடைசி வரை பரீட்சிக்கவும். நாக்கை முன்பக்கமாக நீட்டி, இடப்பக்க பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து, நாக்கின் இடப்பக்கத்தையும், வலப்பக்க பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து, வாயின் வலப்பக்க மூலையை வலப்பக்கமாக இழுத்து நாக்கின் வலப்பக்கத்தையும் பரீட்சித்துப் பார்க்கவும்.நாக்கை முன்பக்கமாக நீட்டி, வலக்கையின் பெருவிரலையும், ஆள்க்காட்டி விரலையும் பாவித்து, நாக்கை வலப்பக்கமாக இழுத்து வாயின் இடப்பக்க மூலையை இடப்பக்கத்திற்கு இழுத்து நாக்கின் இடப்பக்கத்தையும் பரீட்சித்துப் பார்க்கவும்.நாக்கை மேலே பிடித்து நாக்கின் கீழ்ப்பக்கத்தைப் பரீட்சிக்கவும்.
‪#‎வாயின்‬ மேற்பக்கம்/வாயின் கீழ்ப்பக்கம் : நாக்கை இலேசாக மடித்து, வாயின் கீழ்ப்பக்கத்தையும், வாயைத் திறந்து நாக்கை வெளியே நீட்டி எல்லா இடத்தையும் பரீட்சிக்கவும். கடைசியாகத் தாடைமுதல்,கழுத்தின் கீழ்ப்பகுதி வரை, கைவிரல்களால் தடிப்புக்கள் உள்ளனவா எனத் தடவிப் பார்க்கவும். வாயில் ஏதாவது வித்தியாசம் இருப்பின், உடனடியாகப் பல் வைத்திய நிபுணரை நாடவும்.

‪‎வாய்க்குழிப்‬ ‪புற்றுநோய்‬

முன்நாக்கின் மூன்றில் இரண்டு பகுதி, நாவின் கீழ் உள்ள அடித்தளம், முரசு, உதடுகள், சொக்குப்பகுதி எனப் பல பகுதிகளை உள்ளடக்கியதே வாய்க்குழி எனப்படும்.
1. வாய்ப்புற்றுநோய் ஆரம்ப நிலையில் வலியோ, இரத்தம் கசிதலோ, வாயின் செயற்பாடுகளுக்குத் தடையோ கொடுக்கமாட்டாது.இதனால் ஆரம்ப நிலையை யாரும் உணர மாட்டார்கள்.
2. ஆரம்ப நிலையில் காணும் அறிகுறிகளாவன:
அ. அகற்ற முடியாத வெள்ளை நிறமான தழும்பு.
ஆ. சிவப்பு,வெள்ளை நிறம் கலந்த தழும்புகள்.
இ. செந்நிறமாக படர்ந்த பகுதி.
ஈ. நீண்ட நாட்களாக மாறாத புண்.
உ. நாக்கை மடிப்பதற்கு அல்லது வாயைத் திறப்பதற்குச் சிரமம்.சரிவரக் கவனம் செலுத்தாவிடின் இரண்டு- மூன்று ஆண்டுகளில் புற்று நோயாக மாறமுடியும்.
• LEUKOPLAKIA
• ERYTHRO PLASIA
குறிப்பு: இவை ஏற்படுவதற்கான காரணிகளை இனம்கண்டு இவற்றை நிறுத்தினால் இந்நிலைமையில் இருந்து விடுபடலாம்.
01. வாய்ப்புற்றுநோய்
எமது நாட்டில் வயது முதிர்ந்தோரை அதிகளவு பாதிக்கும் புற்றுநோய் வாயில்தான் ஏற்படுகிறது. இந்நோய் ஆரம்பநிலையில் இனம் காண முடியும். முதலாம் படி ஆரம்ப நிலையில் இனம்காணின் இந்நோயை முற்றாகத் தடுக்கலாம்.
முதல் அறிகுறியாகத் தென்படுவது:
• அகற்ற முடியாத வெண்படலம்.
• சிவப்பு- வெள்ளை நிறமான அகற்ற முடியாத தழும்பு.
• வாயின் மென்சவ்வில் ஏற்படும் எரிவுத்தன்மையான புண்.
• வாயைத் திறத்தல், நாக்கை நீட்டுதல் படிப்படியாகக் குறைதல்.
• நீண்ட நாட்களாக மாறாத புண்.
• வாய்க்குழி மேலணிக் கவசத்தோல் கழன்று போதல்.
• உதடு அல்லது வாய்க்குழியில் வளரும் தசைத்தொகுதி.
• உணவை மெல்லுதலிலோ, விழுங்குதலிலோ ஏற்படும் வலி.
• இரத்தக்கசிவு வாய்க்குழியில் ஏற்படல்.
• உறுதியான பற்கள் காலக்கிரமத்தில் தளருதல்- முரசில் அல்லது அதன் அருகில் புற்றுநோய் ஏற்படின் இந்நிலைமை சம்பவிக்கலாம்.
காலம் கடந்த நிலையில் ஏற்படும் மாற்றம்.
அ. நாக்குப் பூரணமாக அசைக்க முடியாது; வாய்க்குழியுடன் ஓட்டுப்படுதல்.
ஆ. தாடையை அசைப்பதில் சிரமம்.
இ. கழுத்துப் பகுதியில் நிணநீர்க் கணுக்கள் வீக்கம் அடைதல்.
ஏற்படுவதற்கான காரணிகள்.
அ. வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு முதலானவற்றை
மெல்லுதல், சுண்ணாம்பு, புகையிலை முதலானவற்றில் புற்றுநோயை
ஏற்படுத்தக் கூடிய பதார்த்தங்கள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆ. சிகரெட், புகையிலை, பீடி முதலானவைகளைப் புகைத்தல்.
இ. மதுபானம்- சாராயம் , கசிப்பு, புளித்த கள் முதலானவைகளை அருந்துதல்.
ஈ. அதிகம் சூடான உணவுகளை அருந்துதல்.
உ. அதிகளவு மிளகாய், மிளகாய்த் தூளின் பாவனை.
ஊ. எமது வாய்ச்சுகாதாரத்தைச் சரிவரப் பேணாமை.
- பற்கள், வாய்க்குழி சரிவரச் சுத்தம் செய்யாமை.
- அனேகமானவர்கள் கூடிய அளவு இனிப்புணவுப் பாவனை- இரவில் பல் தீட்டுவதில்லை
- உடைந்த கூரான பற்கள் அண்டைப்பகுதியைத் தொடர்ந்து உறுத்துதல். ( நாக்கு, கன்னம், முதலியன) இதனால் அப்பகுதிக்கலங்கள் இருக்குமாகில் கலங்கள் இறப்பதோடு மாத்திரமல்ல, அசாதாரண உறுத்தப்படுதல்/ தொடர்ந்து இந்நிலை வளர்ச்சி - பின் புற்றுநோயாகப் பரிணமித்தல்
- புகையிலை - சுண்ணாம்பு சேர் வெற்றிலை - பாக்கை நீண்ட நேரம் வாய்க்குள் வைத்திருத்தல். குறிப்பிட்ட பகுதி பாதிப்பு- வேன்படலமாக மாற்றம்- காலக்கிரமத்தில் புற்றுநோயாக மாறுதல்.
- பீடி புகைக்கும் போது, தொடர்ந்து உதடு சூடு ஏற்படல் - கலங்கள்
இறத்தல் - புற்றுநோயாதல் முதலியன.
எ. காய்கறி வகை, கீரை வகைகள் - கூடிய அளவு பீடை நாசினிகளைப் பாவித்தல். அதன் நச்சுத்தன்மை குறைவடைய முன்னதாக இவைகளை அறுவடை செய்து சந்தைப்படுத்துதல்.
- உதாரணமாக கிருமிநாசினி விசிறி (கீரை, வெண்டி முதலியன) அடுத்த தினங்களில் அறுவடை/ பாவனை. இதனால் வாய்க்குழியின் மேலணி பாதிப்படைதல்.
- விசிறுபவர்கள் எந்தவித தற்பாதுகாப்பும் இன்றி நீண்ட நேரம் விசுறுதல், இயந்திரத்தில் அடைபாடு ஏற்படும் வேளையில், வாயினால் ஊதி/ உறிஞ்சி அடைப்பெடுத்தல் முதலியன.
ஏ. போசாக்குக் குறைபாடு - உயிர்ச்சத்து A,E மற்றும் தாதுப்பொருட்களின் பற்றாக்குறை, இரத்தச்சோகை முதலியன. இதனால் வாய்க்குழி மேலணி உருக்குலைதல்- எனவே புற்றுநோயின் தாக்கத்திற்கு இலகுவில் ஆளாதல் முதலியன.
ஐ. செயற்கைப் பல், பற்கூட்டம் முதலியன எதிர்பாராத நிலையில் தொடர்ந்து கீழ் அல்லது மேல் தாடையை உறுத்துமாயின் மென்சவ்வுகள்; கலங்கள் உறுத்தும் நிலை - புற்றுநோயைத் தோற்றிவிக்கலாம்.
வாய்ப்புற்றுநோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்.
1. பாதகமான பழக்கவழக்கங்களைத் தவிர்த்தல்.
- வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு முதலானவைகளின் பாவனைக்கு ஆளாகாது இருத்தல்.
- பாவிக்கும் நிலைமையாகில்:
√ தினம் பாவிக்கும் தடவைகளை முதலில் குறைத்தல்.
√ மென்ற வெற்றிலையை நீண்ட நேரம் வாய்க்குள் வைத்திருத்தலைத் தவிர்த்தல்.
√ இவை பாவிக்க நேரிடின் உடனுக்குடன் வாயை நன்கு கொப்பளித்தல்.
√ மதுபாவனை, புகைத்தல் முதலானவைகளைப் படிப்படியாகக் குறைத்தல்; முற்றாகத் தவிர்த்தல்.
√ இவை தொடர்பாகச் சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தல். சிறு வயதினிலேயே இப்பழக்கத்திற்கு ஆளாகாது தவிர்த்தல்.
2. வாய்ச்சுகாதாரத்தை நன்கு பேணல்.
- உடைந்த பற்கள், சூத்தைப் பற்களுக்கு காலதாமதமின்றி சிகிச்சையைப் பெறுதல்.
-செயற்கைப் பல், பற்கூட்டம் சரிவரப் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். கிராமமாக வாயின் உட்புறம் அவதானிக்கப்படல் வேண்டும்.
- காலை, மாலை கிராமமாக பல்துலக்குதல் வேண்டும்.
- சாப்பாட்டின் பின் உப்புநீர் பாவித்துப் பல் துலக்குதல்.
- எமது வாய், பற்களை நாமே கிராமமாகப் பரிசோதித்தல். குறைகளை இனம்காணின் பல் வைத்தியரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
- ஆறுமாதத்திற்கு ஒருமுறை பல்வைத்தியர் எம் பற்களை பரிசோதனை செய்வதற்கு நாம் ஆயத்தமாக வேண்டும்.
- எமது முரசு, சொக்கு, தொண்டை முதலானவைகளில் வெண்படலம், வெல்வெட் போன்ற தோற்றம் காணின் காலதாமதமின்றி பல்வைத்திய நிபுணர் ஆலோசனையை நாடவும்.
3. சாதகமான பழக்கவழக்கங்களை நாம் சிறுவயதில் இருந்து கடைப்பிடித்தல்- வாழ் நாட்கள் பூராகவும் அரணாக அமைய முடியும்.
4. தினம் எமது உணவில் காய்கறி, பச்சை இலைவகையின் பாவனை ஊக்கிவிக்கப்படல் வேண்டும்.

தேங்காய்‬ ‪‎ஆபத்தானதா‬?

தென்னைகளை நன்றி உணர்வுள்ள உயிர்களுக்கு உதாரணமாகச் சொல்லுவார்கள். அவற்றுக்கு நாம் ஊற்றிய நீரைக் காலம் கடந்தேனும் இளநீராக எமக்குத் திருப்பித்தருகின்றது என்று சொல்லுவார்கள். பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க தென்னம் பிள்ளைகள் நன்றி உணர்ச்சி உடையன என்றுகூடச் சொல்லுவார்கள்.
தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது, தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவது, கிடுகு வேலிகள், பந்தல்கள் என இந்தத் தென்னம்பிள்ளைகள் நாம் பெற்ற பிள்ளைகளிலும் பார்க்க எமது கலாசார விழுமியங்களுடன் ஒன்றிப்போய் இருக்கின்றன.
நாம் தேங்காயை எவ்வாறு பாதுகாப்பான முறையிலும் பிரயோசனமான முறையிலும் பாவிக்க முடியும் எனச் சிந்திக்க வேண்டும். ஏனெனில் தென்னம்பிள்ளைகள் நமது பிள்ளைகள்.
முட்டுக்காய்த் தேங்காய்களிலே அதாவது நன்கு முற்றமுன்னர் பிடுங்கப்படும் தேங்காய்களிலே எண்ணெய்ப்பிடிப்பு மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. அத்துடன் ஒப்பீட்டளவில் புரதச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. எனவே பிட்டு, மோதகம், சம்பல் போன்றவற்றுக்கு முட்டுக்காய்த் தேங்காய்களைப் பாவிப்பது பாதுகாப்பானதாகும். முட்டுக்காய்த் தேங்காய்களிலிருந்து கிடைக்கும் தேங்காய்ப்பாலின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால் கறி சமைக்கும்பொழுது முட்டுக்காய்த் தேங்காய்த் துருவலை அரைத்து கறியில் சேர்ப்பதன் மூலம் சுவையான பாதுகாப்பான ஊட்டச்சத்துள்ள உணவுகளை நாம் தயாரித்துக்கொள்ள முடியும்.
தேங்காய்களை முட்டுக்காய்ப் பதத்தில் பிடுங்குவதன் மூலம் தென்னைகள் காய்க்கும் வீதத்தை அதிகரிக்கச் செய்ய முடியும். இதன் மூலம் தென்னையிலிருந்து அதி உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சிறிய பரிசோதனை ஒன்றின் மூலம் உண்மையிலேயே முட்டுக்காய்த் தேங்காய்களில் சாதாரண தேங்காய்களிலும் பார்க்க எண்ணெய்ப் பிடிப்புக் குறைவாகத்தான் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். சம அளவான ஒரு முட்டுக்காய்த் தேங்காய்ச் சொட்டையும் சாதாரண தேங்காய்ச் சொட்டையும் எடுத்து வெய்யிலில் நன்கு உலரவிடுங்கள். அதன் பின் இரண்டு சொட்டுக்களையும் தனித்தனியாகக் கடதாசி ஒன்றில் வைத்து அம்மிக் குளவியினால் நசித்து இரண்டினதும் எண்ணெய்த் தன்மையை ஒப்பிட்டுப் பாருங்கள். முட்டுக்காயில் எண்ணெய்த் தன்மையின் அளவு மிகக் குறைவாக இருப்பதை அவதானிக்கலாம்.
முட்டுக்காய்த் தேங்காய்களில் இளநீர் அதிகமாக இருக்கும். இது குடிப்பதற்கு ஆரோக்கியமான இயற்கையான ஒரு பானமாகும். செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு விற்பனையாகும் சோடா வகைகளுடனும் மென்பான வகைகளுடனும் ஒப்பிடும் பொழுது இளநீர் மிகவும் பாதுகாப்பானது. எனவே முட்டுக்காய்த் தேங்காய்களைப் பாவிக்கும் பொழுது ஒரு மேலதிக நன்மையாகக் குடிப்பதற்குப் போதுமான அளவு இளநீரும் கிடைக்கிறது.
எனவே, தேங்காய்களை முற்றமுன் முட்டுக்காய்களாகப் பிடுங்கிப் பயன்படுத்துவதன் மூலம் தென்னையின் பயன்களைப் பெருக்கிக்கொள்வதுடன் எமது உடற் சுகத்தையும் மேம்படுத்திக்கொள்வோம்.
சி.சிவன்சுதன்
மருத்துவ நிபுணர்.

வாழைப்பழத்தைப்‬ பற்றிய சில தகவல்கள்

வாழை ஒரு மரவகையைச் சேர்ந்ததல்ல. அது ததாவர வகையைச் சேர்ந்தது. பூண்டுத் தாவரங்கள் சேர்ந்த பேரினம். உலகிலேயே பெரிய தாவரம் வெப்பம் மிகுந்த ஈரலிப்பான கால நிலையிலேயே இது வளருகின்றது.
உலகில் எல்லாப் பாகங்களிலும் எல்லா நேரங்களிலும் விலைகுறைவான அதேவேளை எல்லாச் சத்துக்களும் நிறைந்த பழம் வாழைப்பழமாகத்தான் இருக்கும். எமது சமூகத்தில் குழந்தைகளுக்கு முதல் ஊட்டும் பழம் அதிகமாக வாழைப்பழமாகத் தான் இருக்கின்றது. எனவே சிறியோர் முதல் பெரியோர் வரை பயன்படுத்தக்கூடிய இலகுவில் ஜீரணிக்கக்கூடிய கட்டமைப்பைக் கொண்டுள்ள பழம் வாழைப்பழம் ஆகும். இதில் காணப்படும் ஃபருக்டோசும், குளுக்கோசும் உடலுக்கு உடனடியாகவே ஆற்றலையும், சக்தியையும் கொடுக்க வல்லவை, வாழைப்பழத்தைப் பற்றிய சில தகவல்கள்
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து மட்டுமல்ல. நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்த்தடுப்பு நாசினியும் கூட இன்றைய விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகில் தரமான உணவு வாழைப்பழம் என பரிந்துரை செய்கின்றார்கள்.
நமது மூளை அமைதியடைய செரா டோனின் என்னும் கூட்டும் பொருள் தேவை. இந்த செராடோனின் உற்பத்தியாவதற்கு காரணமாகப் ட்ரைப் டோபன் ( Triptoptan) என்கின்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த Triptoptan வாழைப்பழத்தில் ஏராளம் உள்ளது.
வாழைப்பழம் உலர்ந்து சருமத்துக்கு மிகுந்த ஈரப்பதனை அளிக்கக் கூடியது. இதில் காணப்படும் பொட்டாசியம் மூளையின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
எல்லாக் காலநிலைகளிலும் கிடைக்கும் பழம் வாழைப்பழம், இதர ஏனைய பழங்களைப் போல் இது வாழை மரத்திலேயே சரிவரக் கனிவதில்லை. அவை காயாகவே இருக்கும்போது குலை வெட்டப்பட்டுகிறது. பழுக்கவைக்கப்படுகின்றன. இதன் காரணமாக வாழைப்பழத்தை வெகு தூரமான இடங்களுக்கு அனுப்புவது சாத்தியமாகிறது.
வாழைப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் பலவலாக அடங்கி இருந்தாலும் பொட்டாசியத்தைத் தவிர்ந்த வேறு எந்த தனிப்பட்ட மிகுந்த அளவில் இல்லை. இந்தத் தாது உப்பு, மற்றத் தாது உப்புக்களைப் போல் உடல் நலத்துக்கு மிகவும் இன்றியமையாதது. வாழைப்பழத்தில் சோயடியம் சத்து மிகவும் குறைவு, சோடியம் அற்ற உணவாகவும், உப்பு. கொழுப்பு அற்ற உணவாகவும் ( கொலஸ்ரோல் இல்லை) வாழைப்பழம் காணப்படுகின்றது. இதனுடைய மென்மையான கட்டமைப்புக் காரணமாக இருதய நோயாளிகள் உயர்குருதி அமுக்கம், வயிற்றுப்புண் (அல்சர்) மற்றும் மலச்சிக்கல் போன்ற நோயாளிகளுக்கு இது சிறப்பான உணவாகும்.
வாழைப்பழத்தில் மிதமான கலோரியே அடங்கியிருப்பதால் உடல் எடை குறைப்பு உணவிலும் இது இடம்பெறுகிறது. அத்துடன் இதனை உண்பவருக்குச் சிறந்த திருப்தியை அளிக்கின்றது.
பழுக்காத வாழைக்காயில் கார்போவைதரேட், மாப்பொருள் வடிவில் உள்ளது, நன்கு பழுக்க வைக்கும் போது இந்த மாப்பொருள், சுக்குரோஸ் குளுக்கோஸ், ஃபரக்ரோஸ் போன்ற வெல்லங்களாக மாற்றமடைகின்றது. நன்கு பழுத்த வாழைப்பழத்தைச் சாப்பிடும் போது இந்த வெல்லங்களின் ஒரு பகுதி உடனடியாக எமது உடலால் உட்கவரப் படுகிறது. அடுத்த 15 நிமிடங்களிலேயே குருதியில் வெல்லமட்டம் அதிகரிப்பதை அவதானிக்கலாம். மீதி உணவுப்பகுதி சற்று மெதுவாக உடலால் உட்கவரப்படுகிறது. இது சற்று நீண்ட நேரத்திற்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுக்கிறது. எனவே களைப்பான நேரங்களில் வாழைப்பழங்களை உண்டால் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

How to make your app responsive according to screen size in Flutter

Step 1 : You can use below code to take your screen width & height      double  width =  MediaQuery . of (context).size.width;      doub...